இல்லம் > ALL POSTS > “அனுமான்” போன்ற உயிரி அவதானிக்கப்பட்டுள்ளது.

“அனுமான்” போன்ற உயிரி அவதானிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் (Meghalaya) Garo hills பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சில இடங்களில், காட்டு மனிதன் (அனுமான் உருவ மனிதன்) உயிரி அவதானிக்கப்பட்டுள்ளதாக அதனை அவதானித்த பலரும் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 அடி (3 மீற்றர்கள்) உயரமுள்ள சுமார் 300 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த காட்டு மனிதன் உடல் முழுதும் உரோமத்தால் மூடப்பட்டு கறுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருப்பதுடன் தாவரபோசணையை உணவுப் பழக்கமாகக் கொண்டிருப்பதாக அவனை அவதானித்த மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காட்டு மனிதன் அல்லது அனுமான் உருவ மனிதன் சிறிய குழுவாக [இரண்டு வளர்ந்தவர்கள் – (ஆண் + பெண்) மற்றும் இரண்டு இளையவர்கள் அல்லது குழந்தைகள் கொண்ட குழுவாக] நடமாடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விசேட உயிரி பற்றிய தகவல்களைத் திரட்டி வரும் ஆய்வாளர்கள் இதன் உரோமம் என்று கருதத்தக்க மாதிரியை சேகரித்திருப்பதுடன் காட்டுப் பகுதியில் இவற்றின் 46 சென்ரிமீற்றர்கள் நீளமுள்ள பாரிய பாதங்கள் பதிக்கப்பட்ட அடையாளங்கள் குறித்த தகவல்களையும் சேகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுவரை இந்த உயிரிகளை நேரடியாக ஒளிப்பதிவு செய்யவோ அல்லது புகைப்படம் எடுக்கக் கூடிய வாய்ப்பையோ, ஆய்வாளர்களோ அல்லது இவற்றை அவதானித்த மக்களோ அவற்றைக் காணும் பொழுதுகளில் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த உயிரியின் இருப்புப் பற்றிய நம்பகத்தன்மை இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை.

பிரிவுகள்:ALL POSTS
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: