இல்லம்
>
ALL POSTS,
உலகம் > பாதிரியார்கள் செக்ஸ் லீலை: மன்னிப்பு கேட்கும் போப் ஆண்டவர்
பாதிரியார்கள் செக்ஸ் லீலை: மன்னிப்பு கேட்கும் போப் ஆண்டவர்
|
|
சிட்னியில் நடைபெறும் உலக இளைஞர்கள் விழா, பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சி களில் போப் ஆண்டவர் கலந்து கொள்கிறார். இளைஞர்கள் மாநாட்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ இளை ஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.சிட்னி நகரில் அவர் சிறப்பு பிரார்த்தனையும் நடத்துகிறார்.கிறிஸ்தவ பாதிரியார் கள் சிலர் `செக்ஸ்’ நடவடிக் கைகளில் ஈடுபட்டதாக ஆஸ்திரேலியாவில் புகார் எழுந்தது. அந்த பாதிரியார்கள் மீது கார்டினல் ஜார்ஜ் பெல் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் எழுந்தது. அந்த பாதிரியார்களை கண்டிக்கும் வகையில் போப் ஆண்டவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி யில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் `செக்ஸ்’ லீலைகளில் பாதிக் கப்பட்ட குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட அந்த பாதிரியார் களுக்காக தானே மன்னிப்பு கேட்கப் போவதாக போப் ஆண்டவர் அறிவித்து இருக் கிறார். இத்தாலியின் ரோம் நகரில் இருந்து சிட்னி நகருக்கு விமானத்தில் செல்ல 20 மணி நேரம் ஆகும்.எனவே 81 வயது போப் ஆண்டவரின் உடல் நலம் பாதிக்காத வகையில் கண் காணித்துக் கொள்ள டாக்டர் கள் குழுவும் அவருடன் செல்கிறது. போப் ஆண்டவ ராக பெனடிக்ட் பதவி ஏற்ற பிறகு மேற் கொள்ளும் 9-வது வெளிநாட்டு பயணம் இது.
|
|
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
அண்மைய பின்னூட்டங்கள்