இல்லம் > ALL POSTS, சினிமா > விஜய் முத்தம் வேண்டும் : ஏங்கும் சோனா

விஜய் முத்தம் வேண்டும் : ஏங்கும் சோனா


முத்தக்காட்சியா… ம்ஹூம் மாட்டேன்… என அடம்பிடிக்கும் நடிகைக்கு மத்தியல் விஜய்யின் முத்தத்திற்காக வெயி்ட்டிங்கில் இருப்பதாக மனம் திறந்து கூறியிருக்கிறார் சோனா.
மிருகம் படத்தில் நாயகன் ஆதியிடம் காசு கறக்கும் வேசி பெண்ணாக நடித்தவர்தான் இந்த சோனா. தற்போது வெளிவந்திருக்கும் ‘பத்து பத்து’ படத்திலும் வயதான கணவனுக்கு கம்பி நீட்டிவிட்டு இளைஞனுடன் சேரத்துடிக்கும் கேரக்டரில் பெயர் வாங்கிவிட்டார். ‘குசேலனி’ல் வடிவேலுவுக்கு இவர்தான் ஜோடி. ‘பத்து பத்து’ படத்தில் பாஸ் மார்க் வாங்கியதையொட்டி தனது சந்தோஷத்தை மீடியாக்களுடன் பகி்ந்து கொண்ட சோனா மனம் திறந்து பேசியதாவது…“என்னை எல்லோரும் ஆங்கிலோ இண்டியன் என்று தவறாக புரி்து கொண்டார்கள். என் அப்பா பிரான்ஸ், அம்மா இலங்கையைச் சேர்ந்தவர். ஆனால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். ஆக நானும் தமிழச்சிதான்.ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று அம்மாவிடம் சொன்னபோது ஷாக்கானார். பிறகு கிளாமர் கேரக்டர் பண்ணப்போறேன் என்றதும் அம்மாவுக்கு இரண்டாவது ஷாக். ஒரு கட்டத்தில் நீ எப்படியோ போ என்று தண்ணி தெளித்து விட்டார்கள்.கிளாமர் கேரக்டர் இல்லாமல் குடும்பப்பாங்கானா வேடங்களிலும் நடிக்க ஆசையிருக்கு. என்ன பண்றது என்னை பார்க்கும் இய்ககுனர்களெல்லாம் கிளாமர் ஆங்கிளில்தான் பார்க்கிறார்கள்.

பாய்பிரண்டுடன் சுற்றுவதாக கிசுகிசுக்கள் வந்தபோது அழுதேன். ஆனால், இப்போது அது பழகிவிட்டது. கிசு கிசு பற்றி கவலைப்படுவதில்லை. எனக்கு பாய் பிரண்ட் இல்லை All பிரண்ட்ஸ்தான். நடிகர்களில் ஆர்யா எனது நெருங்கிய நண்பர். என் வீட்டுக்கெல்லாம் வருவார். இக்கட்டான சூழ்நிலையில் முதல் ஆளாக வந்து உதவி செய்வார். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

விஜய்யுடன் முத்தக்காட்சியில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு அவர் தயாராக இருக்கனும்“.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: