இல்லம் > ALL POSTS, இசை > வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் திடீர் மரணம்

வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் திடீர் மரணம்


பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் திடீரென காலமானார். பிரபல இசைக்கலைஞர்சென்னையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். வயலின் இசையில் தனது விரல் லாவகத்தினால் தனக்கென தனி பாணியை உருவாக்கி மக்களை மயக்கியவர். மகுடி எடுத்து ஆடும் ஆடு பாம்பே என்ற பாடலை அனைவரையும் கவர்ந்திழுத்தவர்.

தொண்டு போற்றத்தக்கது: இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார். வயலின் இசையில் மட்டுமால்லாமல் பல படங்களுக்கு திரை இசை அமைத்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல் கர்நாடக இசைக்கும் அவர் ஆற்றிய தொண்டு போற்றத்தக்கது. இவர் திரை உலகில் பின்னணி பாடலும் பாடியுள்ளார்.

பெரும் இழப்பு: கொட்டாம்பட்டி ரோட்டிலே குட்டி போற சோக்கிலே என்று இவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது. வயலின் என்றாலே குன்னக்குடி என்ற அளவிற்கு உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்ற இவரது மறைவு இசை உலகம் மற்றும் திரையுலகத்திற்கு பெரும் இழப்பு.

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் பற்றிய சிறு கண்ணோட்டம் கர்நாடக இசையிலும், திரையிசை, மெல்லிசை என பல்துறைகளிலும சிறந்து விளங்கினார்.

வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

தமிழகத்தின் தென்பகுதியில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடி எனும் சிற்றூரில் ராமசாமி சாஸ்திரி மீனாஷி அம்மாள் தம்பதியனருக்கு மகனாக பிறந்தார் வைத்தியநாதன்.

அவரது இசைப் பயணம் குன்றக்குடி ஷண்முகநாதர் ஆலயத்தில் இசைக்கபடும் பக்தி இசையை பயின்று அதை ஆலய அர்ச்சகர்களுடன் இணைந்து பாடுவதிலிருந்து தொடங்கியது.

பின்னர் காரைக்குடியில் ஒரு இசை நிகழ்ச்சியில் மறைந்த இசை மேதை அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரது அரங்கேற்றமும் அதுவே.

சிறு வயதிலேயே அந்நாளில் பிரபலமாக இருந்த மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், சாத்தூர் சுப்பிரமணியம் உட்பட பல பிரபல இசை விற்பன்னர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

கர்நாடக இசையின் பல பரிமாணங்களையும் ஆழ்ந்து உணர்ந்த அவர், மரபு ரீதியாக வயலினுடன் மிருதங்கம் இசைக்கப்பட்டு வந்த நிலையில், தவில் கலைஞர் வலயப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகள் நடத்தி, கர்நாடக இசையினை மக்களிடம் எடுத்துச் சென்றார்.

பின்னாளில் ராக ஆராய்ச்சி மையம் எனும் அமைப்பை நிறுவி சில நோய்களுக்கு இசை மூலம் குணம் காண முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

திரையிசையிலும் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கு ஆர்வம் இருந்தது. தியாகராஜ பாகவதர் அவர்களின் கச்சேரிக்கு வைத்தியநாதன் வயலின் இசைத்திருக்கிறார். தமது 16 ஆவது வயதில் மறைந்த ஜி. இராமநாதனின் திரையிசைக் குழுவில் வயலின் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த அவருக்கு 54 திரைப்படங்களுக்கு இசையமைத்த பெருமையும் உண்டு.

வயலின் மூலம் நுட்பமான சாஸ்திரீய இசையை மட்டுமல்லாமல், மிருகங்கள் மற்றும் பறவைகளின் ஒலிகள், இயற்கை ஓசைகள் போன்ற பல ஒலிகளை வாசித்து மக்களிடம் வரவேற்பை பெற்றவர்.

 

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, இசை குறிச்சொற்கள்:,
  1. m.p.senathipathi
    8:53 பிப இல் 2009/12/11

    Thank you very much for giving good information

    Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: