இல்லம் > ALL POSTS, விளையாட்டு > என்னை நோக்கி எறிந்த கற்களை மைல்கற்களாக மாற்றினேன்: சச்சின்

என்னை நோக்கி எறிந்த கற்களை மைல்கற்களாக மாற்றினேன்: சச்சின்உலக சாதனை படைத்து உற்சாகத்தில் இருக்கும் சச்சின், விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தன் மீது எறிந்த கற்களை மைல்கற்களாக மாற்றியிருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து சச்சின் கூறியது:எனக்கு சாதனைகள் முக்கியமல்ல. உலக சாதனை படைத்து உற்சாகத்தில் இருக்கும் சச்சின், விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தன் மீது எறிந்த கற்களை மைல்கற்களாக மாற்றியிருப்பதாக கூறியுள்ளார்.இது குறித்து சச்சின் கூறியது:எனக்கு சாதனைகள் முக்கியமல்ல.

ஆனாலும் என்னை சந்திப்பவர்கள் எல்லாம் சாதனையை பற்றி தான் நினைவுபடுத்தினர். லாராவின் சாதனையை முறியடிக்க 15 ரன் தான் வேண்டும் என்பது எனக்கும் தெரியும். இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் மிகுந்த கவனத்துடன் ஆடினேன். டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்தது, எனது 19 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப் பெரும் சாதனையாக அமைந்தது. இது ஒரேஇரவில் நடக்கவில்லை. இந்த காலக்கட்டத்தில் ஏற்றம், இறங்கங்களை சந்தித்துள்ளேன்.

என்னை நோக்கி விமர்சன கற்களை எறிந்துள்ளனர். இதனை தற்போது மைல்கற்களாக மாற்றி காட்டியுள்ளேன். சாதனைகள் முறியடிப்பதற்கு தான். நான் 16 வயது இளம் வீரராக கிரிக்கெட்டில் காலடி எடுத்த வைத்த போது சாதனை பற்றி நினைக்கவில்லை. எந்த இலக்கையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. சாதனை பற்றி எண்ணாமல் இன்னொரு 16 வயது வீரர் கூட அறிமுகமாகலாம். சவுரவ் கங்குலியும் நானும் நிலைத்து நின்று விளையாட முடிவு செய்தோம். இரண்டாம் நாள் தொடர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால் 88 ரன்களில் அவுட்டானது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இவ்வாறு சச்சின் கூறினார்

தந்தைக்கு நன்றி: மறைந்த தனது தந்தை பற்றி சச்சின் கூறுகையில்,”” சாதனை படைத்த இந்த தருணத்தில் கடவுளுக்கும் எனது தந்தைக்கும் நன்றி. அவரை மிகவும் “மிஸ்’ பண்ணுகிறேன். உயிரோடு இருந்திருந்தால் சாதனையை நினைத்து பெருமை அடைந்திருப்பார்,” என்றார்.

ஒரு நிமிடம் கூட…: சச்சின் மனைவி அஞ்சலி கூறுகையில்,”” குழந்தைகள் பள்ளிக்கு சென்றதால் சாதனை தருணத்தை தனிமையில் ரசித்தேன். சச்சினை ஓய்வு பெறும்படி யாரும் வற்புறுத்தவில்லை. கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக விளையாடி வருகிறார். இம்மகிழ்ச்சி குறைந்தால் ஒரு நிமிடம் கூட அணியில் நீடிக்க மாட்டார்,” என்றார்.

ஓய்வு..ஆவேசம்: சீனியர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்துக்கு சச்சின் எதிர்ப்பு தெரிவித்தார். இவர் கூறுகையில், “ஆரம்பத்தில் என்னை யாரும் கிரிக்கெட் விளையாடச் சொல்லவில்லை. தற்போது யாரும் என்னை ஓய்வுபெறும்படி நிர்ப்பந்திக்க முடியாது. நான் விரும்பும் வரை விளையாடுவேன். எனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை. 19 ஆண்டு காலமாக அணியின் தேவைக்கு ஏற்ப எனது பங்களிப்பை அளித்துள்ளேன். என்னை விமர்சித்து எழுதுபவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களது கருத்து பற்றி எனக்கு கவலையில்லை. எனது மனதில் என்ன இருக்கிறது என்பது பற்றி எனக்கே தெரியாது. அப்படியிருக்கையில் விமர்சகர்களுக்கு மட்டும் எனது மனநிலை பற்றி எப்படி தெரிந்தது என தெரியவில்லை,” என ஆவேசமாக கூறினார்.

லாரா பாராட்டு: தனது சாதனையை முறியடித்த சச்சினுக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் லாரா. இது குறித்து அவர் கூறுகையில்,”” சாதனைகள் முறியடிப்பதற்கு தான். எனது சாதனையை சச்சின் முறியடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து: சாதனை படைத்த சச்சினுக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் கூறுகையில்,””சச்சினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் விளையாடுவதை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அவர் ஒரு “ஜீனியஸ்’ என்பதில் சந்தேகம் இல்லை,” என்றார்.

“நம்பர்1′ பேட்ஸ்மேன்: நேற்று 15வது ரன் எடுத்த போது இந்திய வீரர் சச்சின், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். லாராவின் சாதனையை தகர்த்த இவர் 12 ஆயிரம் ரன்களை எட்டும் முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இவர் இதுவரை, 152 டெஸ்டில் பங்கேற்று 39 சதம், 50 அரைசதம் உட்பட மொத்தம் 12027 ரன்கள் எடுத்துள்ளார்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, விளையாட்டு குறிச்சொற்கள்:
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: