கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தகவல்:தோனி மறுப்பு
இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.முதல் மூன்று போட்டிகளில் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் நாளை பெங்களூருவில் நான்காவது ஒருநாள் போட்டி நடக்க உள்ளது.4வது மற்றும் 5வது போட்டிகளுக்கான அணி தேர்வில் ஆர்.பி.சிங் நீக்கப்பட்டு,இர்பான் பதான் சேர்க்கப்பட்டார்.இது குறித்து தோனியிடம் விளக்கம் அளித்த தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த்,ஆர்.பி.சிங்,தற்போது சரியாக பார்மில் இல்லாததால் அவரை அணியில் சேர்க்க இயலாது என கூறினார்.
இதனால் அதிருப்தி அடைந்த தோனி,தான் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.மேலும் தேர்வாளர்கள் கேப்டனுக்கு மிக குறைந்த அளவே மதிப்பு கொடுப்பதாக பி.சி.சி.ஐ.,பொதுச் செயலாளர் சீனிவாசனிடம் புகார் செய்ய இருப்பதாகவும் இதையடுத்து தோனி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) மறுத்துவிட்டது.இந்திய கேப்டன் தோனியும் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அண்மைய பின்னூட்டங்கள்