இல்லம் > ALL POSTS, விளையாட்டு > பாண்டிங் விரைவில் ஓய்வு?

பாண்டிங் விரைவில் ஓய்வு?


images1வலதுகை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வும் பெறும் சூழல் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால்,ஆஸ்திரேலிய அணியின் பிசியோதெரபிஸ்ட் அலெக்ஸ் கவுன்டுரிஸ் இதை மறுத்துள்ளார்.

வரும் 17ம் தேதி தென் ஆப்ரிக்க அணி,ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3-டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலியா முதலிடத்தை தக்கவைத்து கொள்ள தென் ஆப்ரிக்காவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்நிலையில் வலதுகை மணிக்கட்டில் வலி ஏற்பட்டதை அடுத்து கேப்டன் பாண்டிங்,தனக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் கிரெக் ஹோயை சந்தித்தார். இவருக்கு சுமார் 10-வாரம் வரை ஓய்வு தேவைப்படுவதாகவும்,மீண்டும் காயமடைந்தால் பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் விளையாட்டு வீரர்களுக்கான டாக்டர் பீட்டர் லார்கின்ஸ் அளித்த பேட்டி: கடந்த ஜூன் மாதம் பாண்டிங், மணிக்கட்டு எலும்பு மற்றும் தசைநார் மறுசீரமைப்பு ஆபரேஷன் செய்து கொண்டார். இது முடிந்தவுடனே அவரை நன்கு ஓய்வு எடுக்க சொன்னோம்.

ஆனால்,அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவதிலே அதிக கவனத்துடன் இருந்துவிட்டார். தற்போது மணிக் கட்டு வலி பூரணமாக குணமடைய பாண்டிங்கிற்கு சுமார் 8 முதல் 10 வாரம் வரை ஓய்வு தேவைப்படுகிறது. இல்லையென்றால் அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும். அவரால் முழு உடற்தகுதியுடன் பேட் செய்ய முடியாமல் போய்விடும்.

மணிக்கட்டு வலி அதிகரித்தால் அவரால் ரன்கள் சேர்ப்பது கடினமாகிவிடும். இதன் பின்னர் மீண்டும் எலும்பு அல்லது தசைநாரில் காயம் ஏற்பட்டால், பிரச்னை மிகப்பெரிதாகி விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆனால், பாண்டிங்கிற்கு எந்த சிக்கலும் இல்லை என ஆஸ்திரேலிய அணியின் பிசியோதெரபிஸ்ட் அலெக்ஸ் கவுன்டுரிஸ் தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில்,”பாண்டிங்கிற்கு வலி ஏற்பட்டுள்ளது உண்மை தான்.

சாதாரணமாக ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் அனைவருக்கும் வலி இருக்கத்தான் செய்யும். காயம் அதிகமிருந்தால் அவரால் எப்படி பயிற்சி மேற் கொள்ள முடியும்” என்றார்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, விளையாட்டு குறிச்சொற்கள்:
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: