இல்லம்
> ALL POSTS, அரசியல், அவலம், உலகம் > காஸா பகுதியில் இஸ்ரேல் இரண்டாவது நாளாகத் தாக்குதல்:இதுவரை 296-பேர் பலி
காஸா பகுதியில் இஸ்ரேல் இரண்டாவது நாளாகத் தாக்குதல்:இதுவரை 296-பேர் பலி
காஸா பகுதியில் ஹமாஸ் வளாகங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து இரண்டாவது நாளாக வான் வழியாகத் தாக்குதல் நடத்தியது.இத்தாக்குதல்களில் இதுவரை 296-பாலஸ்தீனியர்கள் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் இந்த இரண்டு நாள் தாக்குதலின்போது பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது 80-ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
அவற்றில் இரு ராக்கெட்டுகள் காஸாவிலிருந்து 30-கிலோமீட்டர் தொலைவிலுள்ள அஷ்தாத் துறைமுகம் அருகே விழுந்தன.இத்தாக்குதலில் யாருக்கும் பாதிப்பில்லை என இஸ்ரேலின் அவசரகால சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனிய தீவிரவாதிகள் மீது தரைவழியாகவும் தாக்குதல் நடத்த காஸா எல்லையை நோக்கி கூடுதல் பீரங்கிகள் மற்றும் ராணுவ டாங்குகளை இஸ்ரேல் அரசு அனுப்பி வருகிறது.
பின்னூட்டங்கள் (0)
Trackbacks (0)
பின்னூட்டமொன்றை இடுக
Trackback
அண்மைய பின்னூட்டங்கள்