இல்லம் > ALL POSTS, இசை, ஊடகம் > இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மியூசிக் லாக்கர்

இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மியூசிக் லாக்கர்


mp3tunes_logoகொம்ப்யூட்டர் டேட்டாக்களுடன் போராடி தலையை பிய்த்துக்கொள்பவர்களுக்கு அவ்வப்போது மனதை இதப்படுத்துவது இசைப்பாடல்களே.கொம்ப்யூட்டர்ரை அவ்வளவாக பயன்படுத்தாதவர்களும் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள கொம்ப்யூட்டரில் தங்களுக்கு பிடித்த இசையை கேட்க விரும்புகின்றனர்.
இதனால் எங்கெல்லாம் பாடல் பைல்கள் கிடைக்கின்றனவோ அவற்றை எல்லாம் அப்படியே கொப்பி செய்து பர்சனல் கொம்ப்யூட்டர்களின் டிரைவ்களில் திணிக்கின்றனர்.இதன் விளைவாக ஒரு கட்டத்தில் பாடல் ஃபைல்களோ கொம்ப்யூட்டர்ரின் ஹார்ட் டிரைவினை ஆக்கிரமிக்க வேறு பைல்களுக்கு இடம் இல்லாமல் போகிறது.பாடல்களை சிடியிலோ அல்லது டிவிடியிலோ சேமித்து வைக்கலாம்.ஆனால் எங்கு சென்றாலும் அவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.அவற்றில் இருக்கும் ஃபைல்களின் வாழ்வும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தானே என்ற பயம் நம்மிடம் உள்ளது.
இந்த வேதனையை போக்க நமக்கு இணையத்தளத்தில் ஒரு தளம் உள்ளது.
இந்த தளத்தில் உங்களை பதிந்து கொண்டால் இசை ஃபைல்களை 25 ஜிபி வரை சேமித்து வைக்கலாம்.அதுவும் கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே இதை மேற்கொள்ளலாம்.எனவே சி.டி.,க்களை தூக்கி கொண்டு அலையாமல் எப்போது பாடல் வேண்டுமோ அப்போது இந்த தளத்திற்கு சென்று பாடலை இறக்கி கேட்டு மகிழலாம்.எந்த ஊரில் எந்த நாட்டிலும் உங்களுக்கான பாடல் கிடைக்கும்.இந்த தளத்தின் முகவரி www.mp3tunes.com இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு என ஒரு அக்கவுண்டை உருவாக்கி பின் நீங்கள் சேர்த்து வைத்த பாடல்கள் அனைத்தையும் அப்லோட் செய்யலாம்.
அதன் பின் அந்த இடத்திலிருந்தும் இந்த தளத்திற்கு சென்று அங்கே உங்கள் யூசர் அக்கவுண்ட் மூலம் உங்கள் பாடல்களை பெறலாம்.உங்கள் நண்பர்களிடமும் இணையவெளியில் இசை லாக்கர் ஒன்றை இலவசமாக கொண்டிருப்பதாகவும் சொல்லிக்கொள்ளலாம்.நல்ல நண்பர்கள் என்றால் அவர்களுக்கு உங்கள் யூசர் நேம் மற்றும் ஐ.டி.,யை கொடுத்து பாடல்களை கேட்டு ரசிக்க சொல்லலாம்.இந்த தளத்தின் பெயரில் எம்.பி.,3
என இருப்பதால் எம்.பி.,3 பாடல்களை மட்டும் தான் இது ஏற்றுக்கொள்ளும் என எண்ண வேண்டாம்.அனைத்து வகையான பார் மட்டுகளையும் இது ஏற்றுக்கொள்கிறது.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, இசை, ஊடகம் குறிச்சொற்கள்:
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: