இல்லம் > ALL POSTS, அரசியல், குழந்தை, சினிமா > பராக் ஒபாமா ஸ்பைடர் மேனுடன் இணைகிறார்

பராக் ஒபாமா ஸ்பைடர் மேனுடன் இணைகிறார்


spiderman-opama

குழந்தைகள் முதல் இளம்பருவத்தினர் வரை புகழ் பெற்ற ‘ஸ்பைடர் மேன்’  படக்கதை புத்தகத்தில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவும் ஒரு கதாபாத்திரமாக சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமா மற்ற குழந்தைகளைப்போலவே ‘ஸ்பைடர் மேன்’ – சிலந்தி மனிதன் படக்கதை புத்தகங்களில் ஆர்வம் கொண்டவர்.
ஸ்பைடர் மேன்’ கதாபாத்திரம் நாட்டிற்கும்,மக்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்தும் வில்லன் கதாபாத்திரத்தை எதிர்த்து போராடி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனால் குழந்தைகள் முதல் இளம்பருவத்தினர் வரை ‘ஸ்பைடர் மேன்’ ஒரு கற்பனை ஹீரோவாகவே இருந்து வருகிறார்.தற்போது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவும் இளம் வயதினர் மத்தியில் நிஜமான புதிய ஹீரோவாக புகழ் பெற்றுள்ளார்.
ஒபாமாவின் ‘ஸ்பைடர் மேன்’ கதைப்புத்தக ஈடுபாடு குறித்து அறிந்து இதை வெளியிட்டு வரும் மார்வல் நிறுவனம்,அவரையும் ஒரு கதாபாத்திரமாக சேர்த்து புதிய படக்கதைப்புத்தகம் வெளியிட முடிவு செய்தது.அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஒபாமா பதவி ஏற்பதை தடுத்து அவருக்கு பதிலாக போலி ஒபாமாவை அப்பதவியில் அமர்த்துவதற்கு ஸ்பைடர் மேனின் நிண்ட கால எதிரி திட்டமிடுகிறான்.இதை தடுத்து நிஜமான ஒபாமா யார் என்பதை பேஸ் போல் மற்றும் அவரது பிற பழக்க வழக்கங்கள் மூலம் உறுதி செய்து, அவரை நிரூபிக்கிறார்.அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி ஏற்கும் நாளில் நடக்கும் நிகழ்ச்சிகளாக இந்தக்கதை நகர்கிறது.இந்தப்படத்துக்கு ‘அமேசிங் ஸ்பைடர் மேன் ‍‍‍‍‍- 583’  என்று பெயரிடப்பட்டுள்ளது.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, அரசியல், குழந்தை, சினிமா குறிச்சொற்கள்:,
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: