இல்லம் > ALL POSTS, இசை, உலகம் > மீண்டும் கலிபோர்னியாவுக்கு திரும்புகிறார் மைக்கேல் ஜாக்சன்

மீண்டும் கலிபோர்னியாவுக்கு திரும்புகிறார் மைக்கேல் ஜாக்சன்


michel_jaksonஒரு காலத்தில் பாப் இசையில் முடிசூடா மன்னனாக புகழ்பெற்றிருந்த மைக்கேல் ஜாக்சன், தற்போது மீண்டும் கலிபோர்னியாவுக்கு திரும்புகிறார். இதற்காக மாதத்துக்கு 40-லட்சம் ரூபாய் வீதம், ஓராண்டுக்கு, பிரமாண்டமான பங்களாவை குத்தகைக்கு எடுத்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டில் குழந்தையுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதாக சிக்கலில் மாட்டிக் கொண்டார் மைக்கேல் ஜாக்சன்.கலிபோர்னியாவின் சாந்தா பார்பராவில் உள்ள நெவர்லாந்து ராஞ்ச் எஸ்டேட்டில் போலீசார் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு இனி எப்போதும் திரும்ப வரப்போவதில்லை என்று, மைக்கேல் ஜாக்சன் சபதம் செய்திருந்தார்.

ஆனால், தற்போது இந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். மீண்டும் கலிபோர்னியாவுக்கு திரும்புவதற்கு முடிவு செய்துள்ளார். 2008ம் ஆண்டில் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்த வீடுகளில், அதிக மதிப்பு கொண்டவற்றின் பட்டியலில், தற்போது ஜாக்சன் குத்தகைக்கு எடுத்துள்ள பங்களாவும் இடம் பெற்றிருந்தது.இந்த பங்களாவை ஓராண்டு குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் ஆவணத்தில் மைக்கேல் ஜாக்சன் கையெழுத்திட்டதை தொடர்ந்து, விற்பனை பட்டியலில் இருந்து இந்த பங்களா நீக்கப்பட்டுள்ளது.

இசை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கலிபோர்னியாவில் தான் இடம்பெறு கின்றன. எனவே, இது தொடர்பான நடவடிக்கைகளில் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காகவே, கலிபோர்னியா திரும்புவதற்கு மைக்கேல் ஜாக்சன் முடிவு செய்துள்ளார்” என்று, அவரது மேலாளர் தோமி விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, இசை, உலகம் குறிச்சொற்கள்:
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: