இல்லம் > ALL POSTS, அரசியல், உலகம் > மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்த பதவிக் காலத்தின் முடிவு வரை காத்திருக்கப் போவதில்லை – ஒபாமா

மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்த பதவிக் காலத்தின் முடிவு வரை காத்திருக்கப் போவதில்லை – ஒபாமா


obamaஇஸ்ரேலும் பாலஸ்தீனர்களும் சமாதான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மத்திய கிழக்கிலான சமாதானத்திற்கான திட்டமொன்றை முன்னெடுத்தமை குறித்து சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

பாலஸ்தீன இஸ்ரேலிய பிணக்கை மட்டும் கருத்திற்கொண்டு சிரியா, ஈரான், லெபனான் அல்லது ஆப்கானிஸ்தானின் பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பதை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாகும் என அவர் கூறினார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற ஒபாமா தனது பிரசார நடவடிக்கைகளின் போதான வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முன்னாள் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜோர்ஜ் மிட்செலை மத்திய கிழக்கு சமாதான தூதுவராக நியமித்து அவரை அப்பிராந்தியத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

மிட்செல் புதன்கிழமை மாலை மத்திய கிழக்கிற்கான தனது பயணத்தை ஆரம்பித்தார். எனது பிரசாரம் ஜோர்ஜ் மிட்செலை மத்திய கிழக்கிற்கு அனுப்பி வைத்துள்ளேன். பநாலஸ்தீன இஸ்ரேலிய சமாதானம் தொடர்பில் உடன்படிக்கை யொன்றை எட்ட எனது நிர்வாகத்தின் இறுதிக் காலம் வரை நாம் காத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. நாம் இப்போதே எமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என ஒபாமா குறிப்பிட்டார்.

மேற்படி பிணக்குகளில் சம்பந்தப்பட்டவர்களது அக்கறைகளை முன்கூட்டியே நியாயப்படுத்துவதை விடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தமது நிர்வாகம் விரும்புவதாக ஒபாமா தெரிவித்தார். அத்துடன், இஸ்ரேலியர்களுக்கோ அன்றி பாலஸ்தீனர்களுக்கோ எது நல்லது என்பதை எம்மால் கூற முடியாது. அவர்கள் தான் அது குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

இரு தரப்பினரும் தமது மக்களின் சுபீட்சம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உணரும் தருணம் மலர்ந்து விட்டது என நான் நம்புகிறேன். அத்துடன், அவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதான நேரமாகவும் இது உள்ளது என ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்கர்கள் முஸ்லிம் உலகிற்கு எதிரிகள் அல்லர் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா திங்கட்கிழமை தெரிவித்தார். அத்துடன் பிரதான முஸ்லிம் நாடொன்றின் தலைநருக்கு சென்று அங்கு உரையாற்றப்போவதாக அவர் திரும்பவும் வலியுறுத்தினார்.

தான் சிறுவனாக இருந்தபோது பல வருடங்களை இந்தோனேசியாவில் கழித்திருப்பதாக தெரிவித்த பராக் ஒபாமா, முஸ்லிம் நாடுகளினூடான தனது பயணங்கள் மக்களின் மத விசுவாசங்களுக்கு அப்பால் அனைவருக்கும் பொதுவான நம்பிக்கைகளும் கனவுகளும் இருப்பது தொடர்பான பக்குவ நிலையை ஏற்படுத்தியிருந்ததாக கூறினார்.

அமெரிக்கர்கள் உங்கள் எதிரிகள் அல்ல, நாம் சிலவேளைகளில் தவறு செய்திருக்கலாம், சரியாக நடந்து கொள்ளாமலும் இருந்திருக்கலாம் என்பது தொடர்பில் முஸ்லிம் உலகிற்கு எடுத்துக் கூறுவது எனது பணியாகவுள்ளது என ஒபாமா கூறினார்.

அல் அராபியா செய்மதி தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, அரசியல், உலகம் குறிச்சொற்கள்:,
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: