இல்லம் > ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு > காலில் விழும் ரசிகர்கள்… தர்மசங்கடமான நிலையில் சச்சின்

காலில் விழும் ரசிகர்கள்… தர்மசங்கடமான நிலையில் சச்சின்


sachin1

தன்னை கடவுளாக நினைத்து ரசிகர்கள் காலில் விழுந்து வணங்கும் போது தர்மசங்கடமான நிலை ஏற்படுவதாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்.

கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இவர், தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கை, அனுபவங்கள், எதிர்கால திட்டம் குறித்தும் சச்சின் அளித்த பேட்டி:

கிரிக்கெட் ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு சில சமயங்களில் ரசிகர்களின் செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது.சிலர் நீங்கள் தான் கடவுள் எனக் கூறி காலை தொட்டு வணங்குகிறார்கள். ரசிகர்களின் இந்தச்செயல் எனக்கு அதிருப்தியும், வேதனையும் அளிக்கிறது. இது மாதிரி யான செயல்களை ரசிகர்கள் தவிர்ப்பது நல்லது.
* ஓய்வுக்குப் பின் உங்களது திட்டம் என்ன?
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் என்ன செய்வது என்ற உறுதியான திட்டம் எதுவும் இல்லை. ஆனால் கிரிக்கெட்டுடன் உள்ள எனது உறவு தொடரும். தற்போதைய எனது கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் தான் இருக்கும்.

அடிக்கடி உங்கள் மீது விமர்சனம் எழுவது பற்றி உங்கள் கருத்து?

என் மீது அடிக்கடி எழும் விமர்சனங்களை பற்றி கவலை இல்லை. விளையாடும் போது இது மாதிரி விமர்சனங்களை வெளியிடும் பத்திரிகை களின் பார்வையில் இருந்து விலகிக் கொள்ளவே நினைப்பேன்.

நீங்கள் விசேஷ மானவர் என்பதை உணர்கிறீர்களா?

சாதாரண மனிதரை விட, தனிச்சிறப்பு உடைய வனாக திகழ்வதை பெருமையாகக் கருது கிறேன். இதன் மூலம் பல சமயங்களில் இக்கட்டி லிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ள முடிகிறது. உதாரணமாக கடந்த 1994 ம் ஆண்டு ஆஸ்திரேலி யாவில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற் கொண்டது. சிட்னியில் அப்போது நானும் மற்ற இரண்டு வீரர்களும் வெளியில் சென்றிருந் தோம்.ஆனால் நாங்கள் வருவதற்குள் ஓட்டலில் தங்கியிருந்த ஒட்டு மொத்த அணியும் எங்களது பேக் மற்றும் உடமைகளுடன் கிளம்பி விமான நிலையம் சென்று விட்டது. அச்சமயம் அவர்களை தொடர்பு கொள்ள கையில் மொபைல் போனும் இல்லை. ஆனால் நாங்கள் சிட்னியில் இருந்து மெல்போர்ன் செல்ல வேண்டும். எங்களிடம் டிக்கெட், பாஸ்போர்ட் எதுவும் இல்லை. இருப்பினும் விமான நிலையம் சென்று அங்குள்ள அதிகாரியிடம் நடந்ததை விளக்கினேன். என்னை நன்கு தெரிந்து கொண்ட அந்த நபர், பாஸ்போர்ட், டிக்கெட் எதுவும் இல்லாமலேயே மூன்று போர்டிங் பாஸ் கொடுத்து எங்களை வழி அனுப்பி வைத்தார். அப்போது தான் நினைத்தேன், நான் விசேஷமானவன் என்று.

எந்த ஒரு விளை யாட்டையும் பார்க்காமல் ஒரு நாள் முழுவதும் இருந்த அனுபவம் உண்டா?

கடந்த டிசம்பர் 31 ம் தேதி முழுவதும் அவ்வாறு இருந்தேன். எனது குடும்பத்தினருடன் கடல் மட்டத்திலிருந்து 7000 அடிக்கு மேல் இயற்கை வாசஸ்தலமான முசூரியில் பொழுதை கழித்தேன். பனி மலைகளுக்கு மத்தியில் நீண்ட தூரம் “ரிலாக்சாக’ நடந்தேன். அந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது.

சமீபத்தில் நீங்கள் பெருமைபட்ட விஷயம் என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்ததை பெருமையாகக் கருது கிறேன்.

சக வீரர்களுடன் குறும்புச் செயலில் ஈடுபடுவதுண்டா?

சக வீரர்களிடம் அடிக்கடி குறும்புகளில் ஈடுபடுவேன். ஒரு முறை வீரர்கள் அனைவரும் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றோம். அப்போது பிரட்டில் வாசாபியை கலந்து யுவராஜ் சிங்கிடம் நன்றாக இருக்கும் என சாப்பிடக் கொடுத்தேன். அது என்னவென்று தெரி யாமல் யுவராஜ் சிங்கும் சாப்பிடத் தயாரானார். கடைசி நிமிடத்தில் அதை தடுத்தேன்.

ரத்தத்தில் கடிதம்: கடந்த காலங்களில் ரசிகர்கள் ரத்தத்தினால் கடிதம் எழுதி தனக்கு அனுப்புவர் என சச்சின் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “” ரசிகர்களில் ஒரு சிலர், ரத்தத்தால் கடிதம் எழுதி எனக்கு அனுப்புவர். அவர்களது செயல் எனக்கு வருத்தத்தை அளிக்கும். அது மாதிரியான செயல்கள் தற்போது நடப்பது இல்லை,” என்றார்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: