இல்லம் > ALL POSTS, மருத்துவம் > முதுகுவலிக்கு முறையற்ற இயக்கமே காரணம்

முதுகுவலிக்கு முறையற்ற இயக்கமே காரணம்


back_bornநம்முடைய எண்ணங்களை செயலாக்க வேண்டுமென்றால் நமது உடல் அதற்கு ஒத்துழைக்கவேண்டும். உடலின் செயல்பாட்டில் நமது வேகத்தையும், தன்மையையும் உறுதி செய்வது எலும்புகள். உடலில் உள்ள எந்த உறுப்புகளில் பிரச்சினை ஏற்பட்டாலும், நம்முடைய இயக்கம் பாதிக்காது. ஆனால் எலும்பு பாதிக்கப்பட்டால் மட்டும் நமது இயக்கம் முழுவதுமாக முடங்கிவிடும்.

ஆனால் எலும்பு பாதிக்கப்பட்டால் மட்டும் நமது இயக்கம் முழுவதுமாக முடங்கிவிடும். இந்த நிலையில் நமது எலும்புகளில் இயற்கையாக ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்தும், இயற்கையற்ற முறையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் எம்மிடையே உள்ள சந்தேகங்களை வினாக்காளக்கி, விளக்கம் கேட்க, அதற்குரிய விடையை விரிவாக வழங்குகிறார், எலும்பு மருத்துவத்தில் நீண்ட அனுபவம் பெற்ற வரும், தமிழக நகரான திருநெல்வேலியில் இயங்கி வரும் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் பிரான்சிஸ் ஏ.ராய். “எலும்புகளில் ஏற்படக் கூடிய பல பிரச்சினைகளில் ஒன்று, ஓஸ்டியோ பெரெசிஸ் என்கிற எலும்புக் கரைவு நோய். மற்றொன்று, அதிக எடை, உடற்பயிற்சி இல்லாதவ ர்களுக்கு வரக்கூடியது “எலும்புத் தேய்மானம்” என்கிற பிரச்சினை.

நடைப்பயிற்சியின் மையாலும், மேற்கத்திய கலாசார வாழ்க்கை முறையை கண்மூடித்தனமாக பின்பற்றுவதன் காரணமாகவும், தற்போது 40,45 வயதிலே இந்த பிரச்சினை, அதிகமாக வர ஆரம்பித்துவிட்டது…”என்று தம்மை நாடி வந்த நோயாளியிடம் விளக்கிக் கொண்டிருந்த டாக்டர் பிரான்சிஸ் ஏ. ராயை சந்தித்தோம்.

குதிகால் வாதம் என்றால் என்ன? அதனை குணப்படுத்த இயலுமா?

குதிகால் எலும்புக்கும் விரல்களுக்கும் இடையே “அப்போ நீயூரோசிஸ்” என்ற இணைப்பு இயல்பாக உள்ளது. முதுமையின் காரணமாக இந்த இணைப்பில் சுருக்கம் உருவாகும் போது குதிகால் வாதம் ஏற்படுகின்றது. காலையில் தூங்கி எழுந்தவுடன், அடியெடுத்து வைக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும்.

34 அடிகள் எடுத்து வைத்து நடக்கும் போது இதனால் ஏற்படும் சிரமத்தை உணரலாம்., பின்னர் இயல்பாக நடக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனைத்தான் மருத்துவ துறை குதி கால் வாதம் என்று குறிப்பிடுகின்றது. இந்த குதிகால் வாதமானது ஒரு மூட்டிலிருந்து அடுத்த மூட்டிற்குப் பரவாது.

இதனை குணப்படுத்த, சரியான முறையில் உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். MCR எனப்படும் மைக்ரோ செல்லுலார் ராப்பர், MCP எனப்படும் மைக்ரோ செல்லுலர் பாலிமர் ஆகியவற்றால் ஆன செருப்புகளை அணிவதன் மூலமும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம். மணல் மற்றும் கடற்கரை மணலில் காலணி அணியாமல் நடப்பதும், மருந்து, மாத்திரைகள் மற்றும் பிசியோதெரபி செய்து கொள்வதன் மூலமும் இதனைக் குணப்படுத்தலாம். எந்த நிலையில் இருந்தாலும் இதனை பூரணமாக குணப்படுத்த இயலும்.

எலும்புத் தொடர்பாக இளவயதினரை அதிகமாக பாதிக்கும் பிரச்சினை எது?

மூட்டுகளுக்கு இடையே நிகழும் உராய்வினைத் தடுக்க ஒருவகையான திரவம் இயல்பிலேயே நமது உடலில் இருக்கிறது. இதன் அடர்த்தி குறைந்து வருவது தான், எலும்பு தேய்மானத்தின் முதல் நிலை. (அதாவது எண்ணெய் போல் இருக்க வேண்டிய திரவம், அடர்த்தி குறைந்து தண்ணீர் போல் ஆகிவிடுவது). இது தான் இன்றைய இளைய தலை முறையினரை பெருமளவில் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக, 3540 வயதுள்ளவர் களைப் பெரும்பாலும் பாதிக்கிறது. இதனை நிவர்த்தி செய்ய “ஜெல்’ போன்ற ஊசிகள், மூட்டுகளில் செலுத்தப்படுகின்றன. இது உராய்வைக் குறைக்கும் திரவத்தின் அடர்த்தியைக் அதிகரிக்கிறது. இக்குறை களைச் சீர்செய்ய தொடர்ச்சியாகப் போடப் படும் ஊசிகளும் தற்போது உள்ளன.

இது போன்ற சிகிச்சைகள் பலனளிக்காமல், தேய்மானம் மிகவும் முற்றிய நிலையில் இருந்தால் மட்டுமே மூட்டினை மாற்றும் அறுவைச் சிகிச்சை செய்யப் பரிந்துரைக் கபடுகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிக்சை செய்து கொண்டால் வலி இருக்காது. ஆனால் இயல் பாக எந்த அளவுக்கு (90 120 டிகிரி) மூட்டினை இயக்கும் இயல்பு உள்ளதோ, அதே அளவில் மூட்டு மாற்று அறுவைசிகிச் சைசெய்த பின்னும் இருக்கும் என்று உறுதி யாக கூற இயலாது. அதே தருணத்தில் மாற்று றப்பர்போல் தண்டு செயல்படும் என நினைப்பது தவறு.

இன்றைய சூழலில் முதுகு (எலும்பு) வலியால் பாதிக்கப்படாதோர் மிக குறைவு. இது எதனால் ஏற்படுகிறது? முழுமையாக குணப்படுத்த இயலுமா?

முதுகெலும்பில் ஏற்படும் வலியினை (Back Pain) இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. முறையற்ற உடலியக்கத்தால் வரும் பாதிப்பு (மெக்கானிக்)

2. உடலின் தோன்றும் பிற குறைகளால் வரும் பாதிப்பு (ஆர்கானிக்) முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் முறையற்ற உடலியக்கச் செயல் பாட்டினால் தான் அதிகமாகப் பாதிக்கப் படுகின்றனர். அதிக சுமை சுமப்பவர்கள், கணனித் துறைப் பொறியியலாளர்கள் போன்றோர்கள் (நீண்ட நேரம் அமர்வதால்) இவ்வகைப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மேற்கத்திய கலாசார வாழ்க்கை முறையின் காரணமாகவும் இந்தப் பிரச்சினை ஏற்படு வதற்கு சாத்திய கூறு உண்டு. இக்குறை பாட்டினைத் தவிர்க்க முதுகெலும்புகளை இயக்கும் நீச்சல், ஓட்டப்பயிற்சி (குறைந்த அளவு 20 நிமிடம்) மிதிவண்டி ஓட்டுதல், ஸ்கிப்பிங் பயிற்சி ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், உட்காருவதற்கும் படுப்பதற்கும் இடைப்பட்ட நிலையினைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இயற்கையான உடற்குறை காரணமாகத் தோன்றும். மூட்டுவலியே அறுவைச் சிகிச்சை வரை கொண்டு வருகிறது. இத்தகு பிரச்சினையை சீர்செய்ய மைக்ரோ ஸ்கோப்பைப் பயன்படுத்திச் செய்யப்படும் மைக்ரோ சர்ஜரி முறை தற்போது நடை முறையில் உள்ளது. முதுகில் செய்யப் படும் அறுவைச்சிகிச்சை, முதுகெலும்பில் உள்ள குறைபாடு, கால் போன்ற எலும்புகளில் ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற் கேயாகும். முதுகெலும்பிணைப்பில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சையில் வலி தீருமென்று உறுதியாக கூற முடியாது. 23 இணைப்பு எலும்புகளில் ஒரு இணைப்பில் அறுவைச் சிகிச்சை செய்து சரிசெய்தாலும், மற்ற இணைப்பிலும் பாதிப்பு பரவிடும் வாய்ப்பு களே அதிகம்.

முட்டிகளில் தேய்மானம் ஏற்படுவதைப் போல, முதுகெலும்பில் தேய்மானம் ஏற்ப டலாம். இதற்கு பிஸியோதெரபி ஊசி மருந் துகள் மூலம் நிவாரணம் காணலாம். இடுப்பு எலும்பும், முதுகெலும்பும் இணையும் மூட்டுகளிலும் கூட தேய் மானப் பிரச்சினை ஏற்படு வதற்கு வாய்ப் புள்ளது. இந்த பிரச்சனை இருப்பவர்கள் தூக்கத்தில் புரண்டு படுக்கும்போதும், உட்காரும் போதும் வலியை உணர்வர். முதுகெலும்பும், இடுப்பெலும்பும் இணைந்துள்ள காரணத்தால் நடக்கத் தொடங்கும் 45 அடிகளைக்கூட வைக்க முடியாத அளவுக்கு வலியை உணர்வர். பின்னர் இயல்பாக நடக்க ஆரம்பித்து விடுவர். முதுகு வலியைப் பொறுத்தவரை முழுமையாக குணம் பெறுவது மருத்துவர்களின் ஆலோச னையை தீவிர கவனத்துடன் பின்பற்று வதன் மூலமே சாத்தியப்படும்.

முதுகெலும்பில் அறுவைச் சிகிச்சை செய்தபின் வழக்கமான பணிகளில் ஈடுபட எவ்வளவு காலமாகும்?

மைக்ரோ சர்ஜரி செய்து கொண்டவர்கள் 5 ஆம் நாளிலேயே நடக்கலாம், இருப் பினும் 10 நாள் ஓய்வுக்குப் பின் இயல்பான வாழ்க்கை முறையைத் தொடங்கலாம். ஆனாலும் 3 மாத காலத்திற்கு கடினமான வேலைகளை செய்வதை தவிர்த்தால் அறுவை சிகிச்சை முழு பலனை தரும் எனலாம். வெளிநாடுகளிலிருந்து சிகிச்சைக்காக வருபவர்களுக்கு சிகிச்சையை உடனடி யாக தொடங்க என்னென்ன சோதனை முடிவுகள் தேவை? என்ன வேலை செய்கிறார்? எவ்வளவு காலமாக செய்கிறார். இடுப்பு வலிகள் எவ்வளவு காலமாக இருக்கிறது. உடலை இயக்கும் போதோ, கை, கால்களை நீட்டி மடக்கும் போதோ மின்சாரம் தாக்கியதைப் போன்ற உணர்வுகள் இருந்தால், அது தொடர்பான செய்திகள், எக்ஸ்றே மற்றும் Mகீஐ ஸ்கேன் இவற்றின் முடிவுகளை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு தான் சிகிச்சையைத் தொடங்கு வோம்.

எலும்பில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா?

புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இவை யிரண்டும் முதுகு வலியினை (Back pain) அதிகரிக்கும் முக்கிய காரணிகள். சிகரெட் குடிப்பவரைக் காட்டிலும், பீடி பிடிக்கும் வழக்கம் உள்ள வர்களை, TAO (டிராம்போ ஆண்சைனா டிரான்ஸ்) செல்கள் இரத்தத்தில் பல்கிப் பெருகி, அடைப்பினை ஏற்படுத்து கின்றன. இதனால் கல்களில் குடைச்சல்கள் உருவாகி ன்றன.

பெண்களுக்கு கல்சியத்தின் அன்றாடத் தேவை 1 கிராம் என்றால் மெனோபாஸுக்கு பின்னர் தேøயான கல்சியத்தின் அளவு 3 கிராமாக அதிகரிக்கிறது. அதாவது கல் சியத்தின் தேவை 3 மடங்கு அதிகரிக் கிறது. பெண்களைப் பொறுத்தவரை, வேலை செய் யும்போது முதுகுப்பிடிப்பு ஏற்படுவ தாலும், மெனோபாஸுக்கு பின்னர் வரும் கல்சியப் பற்றாக்குறை காரண மாகவும் முதுகுவலி மற்றும் ஆஸ்டியோ பெரேசிஸ் (எலும்புக் கரைவு) ஆகியவை ஏற்படுகி ன்றன.

எலும்பியல் மருத்துவத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?

விபத்திலோ அல்லது வேறு எந்த வகையிலோ கை, கால்கள் முழுவதுமாகச் துண்டிக்கப்பட்டு விட்டாலும், அதனை புதிதாகப் பொருத்துமளவிற்கு எலும்பியல் மருத்துவத்துறை தற்போது வளர்ந்துள்ளது. இதற்கு “ரிஇம்பிளான்ட்டேஷன்” என்று பெயரிடப் பட்டுள்ள பிளாஸ்டிக் சர்ஜரி முறையாகும். துண்டிக்கப்பட்ட உறுப்பு களை மீண்டும் பொருத்த முடியும்.

துண்டிக் கப்பட்ட உடல் உறுப்புகளைப் பாதுகாக்க, அருகிலுள்ள ஓடும் தூய நீரிலோ அல்லது தூய நீரிலோ அவற்றைக் கழுவி, பிளாஸ்டிக் பையால் சுற்றி, அதனை ஐஸ் கட்டியில் வைத்து, பாது காப்பாக எடுத்து வந்தால் (நேரடியாக உறுப் புகளை ஐஸிலோ, ஐஸ் நீரிலோ வைக்கக் கூடாது) அதனை மீண்டும் பொருத்திவிட லாம். எலும்பு முறிந்து, புண் ணாகிவிட்ட நிலையிலும், அதனை மறுசீரமைப்பு செய்யும் சிகிச்சை முறை தற்போது பெருமளவில் பயன் பாட்டிலுள்ளது.

போலியோ வால் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஏதேனும் சிகிச்சை முறைகள் உண்டா?

உண்டு. போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நன்றாக இயங்கும் காலில், எடையை முழுவதும் செலுத்தி நடப்பதால் 35 ஆண்டுகளில் எலும்புகள் தேய்மானமாகி விடும் வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க கால்களில் காலிப்பர்களைப் பொருத்தி, இயல்பான காலினைப் போன்று நடக்க வைக்க முடியும்.

இதனை முன்னாள் இந்திய குடியரசு தலைவரான அப்துல்கலாம் தலைமையிலான அறிவியல் குழு 1992 ஆம் ஆண்டில் இதற்குரிய காலிப்பர்களை வடிவமைத்தது. இதனையே பெரும்பான் மையான மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.

நன்றி- இணையம்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, மருத்துவம் குறிச்சொற்கள்:
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: