இல்லம் > ALL POSTS, சினிமா > ஐஸ்வர்யா ராய் வடிவில் பார்பி பொம்மைகள்

ஐஸ்வர்யா ராய் வடிவில் பார்பி பொம்மைகள்


aishwarya1

 

விரைவில் ஹாலிவுட் நடிகைகளுக்குக் கிடைத்த பெருமை வரிசையில் நம்ம ஊர் ஐஸ்வர்யா ராயும் சேரவுள்ளார். ஐஸ்வர்யா ராயின் உருவத்தில் பாலிவுட் பார்பி என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற பார்பி பொம்மைகள் தயாரிக்கப்படவுள்ளனவாம்.

 

உலகப் புகழ் பெற்ற பார்பி பொம்மைகளை, உலகப் புகழ் பெற்ற நடிகைகளின் முகங்களை வைத்து இதற்கு முன்பு உருவாக்கியுள்ளனர். பியான்ஸ் நோல்ஸ், எலிசபெத் டெய்லர், டயானா ராஸ் ஆகியோருக்கு அந்த பெருமை கிடைத்தது. இந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யா ராயும் இணையவுள்ளார். ஐஸ்வர்யாவின் முகத்தை வைத்து உருவாக்கப்படவுள்ள பார்பி பொம்மைகளுக்கு பாலிவுட் பார்பி என பெயர் சூட்டவுள்ளனர். இதுதொடர்பாக பார்பி பொம்மை தயாரிப்பாளர்களான மேட்டல் நிறுவனத்துடன், ஐஸ்வர்யா ராயின் ஏஜென்டுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

இந்த பாலிவுட் பார்பி பொம்மைகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு விடப்படும்.

சமீபத்தில்தான் பார்பி பொம்மைக்கு 50 வயதானது. இதை மேட்டல் நிறுவனம் சிறப்பாக கொண்டாடியது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் வடிவில் உருவாக்கப்படும் பார்பி பொம்மைகளுக்கு இந்தியாவில் நல்ல மார்க்கெட் கிடைக்கும் என அது கருதுகிறது.

இந்த பாலிவுட் பார்பி பொம்மையின் கண்கள், ஐஸ்வர்யா ராயின் கண்களைக் கொண்டிருக்கும். மேலும், இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் டிசைன் செய்துள்ள உடைகளை இந்த பொம்மை அணிந்திருக்கும்.

ஏற்கனவே லண்டனில் உள்ள மேடம் டுஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் ஐஸ்வர்யா ராயின் முழு உருவ மெழுகு பொம்மை இடம் பெற்றுள்ளது. அவரது மாமனார் அமிதாப் பச்சனின் பொம்மையும் அங்கு இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போது பார்பி வடிவில் ஐஸ்வர்யாவுக்கு புதுப் பெருமை கிடைக்கவுள்ளது.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:,
 1. latha
  4:07 பிப இல் 2009/11/26

  Very Nice.

  Like

 2. latha
  4:07 பிப இல் 2009/11/26

  Ais very nice

  Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: