இல்லம் > ALL POSTS, இசை, ஊடகம் > மோட்டரோலா விளம்பரம்: நடிக்க ரகுமானுக்கு ரூ. 28 கோடி!

மோட்டரோலா விளம்பரம்: நடிக்க ரகுமானுக்கு ரூ. 28 கோடி!


a_r_rahman

ஆஸ்கர் விருதுக்குப் பிறகு தனது சம்பளத்தை ரஹ்மான் ஏற்றாவிட்டாலும், சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் தானாகவே அவர் சம்பளத்தை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிட்டன.
உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இதுவரை தோன்றி வந்த மோட்டரோலா செல்போன் விளம்பரத்தில் விளம்பர மாடலாக நடிக்க மட்டும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.28 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். உலகின் 2வது மிகப் பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனம் மோட்டரோலா. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் சர்வதேச விளம்பர மாடலாக முன்னணி கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இருந்து வந்தார். அவரது ஒப்பந்த காலம் இப்போது முடிவடைந்துவிட்டது.

இந் நிலையில், புதிய விளம்பர மாடலாக ஏ.ஆர். ரகுமானை மோட்டரோலா நியமித்துள்ளது.

அந்நிறுவன விளம்பரங்களில் தோன்ற டேவிட் பெக்காம் பெற்ற தொகை ரூ.22 கோட பெற்றுவந்தார். இப்போது அவரது இடத்தைப் பிடித்துள்ளதன் மூலம் ஏ.ஆர். ரகுமானுக்கு மோட்டரோலா நிறுவனம் ரூ.28 கோடி சம்பளம் தர முன்வந்துள்ளது.

இது பெக்காம் பெற்றதைவிட 20 சதவிகிதம் அதிகம். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 2 ஆஸ்கர் விருதுகளை ரகுமான் பெற்ற பிறகு, அவரது விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. அவரை ஒப்பந்தம் செய்ய பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, இசை, ஊடகம் குறிச்சொற்கள்:
 1. kazeeb
  10:21 பிப இல் 2009/04/01

  மோட்டோரோலா அமெரிக்க கம்பெனி இல்ல தோழா.. அமெரிக்க முகமூடி அணிந்த இஸ்ரேலிய கம்பெனி…இஸ்ரேலியர்களின் பணத்தை வாங்கி அவர்களால் கொல்லப்படும் இஸ்லாமியர்களுக்கு உதவினால் போற வழியில் ஏதேனும் புண்ணியம் கிடைக்கும்னு ரஹ்மானிடம் சொல்லி வைங்கோ….

  Like

 2. 8:44 முப இல் 2009/04/02

  ”மோட்டோரோலா அமெரிக்க கம்பெனி இல்ல தோழா.. அமெரிக்க முகமூடி அணிந்த இஸ்ரேலிய கம்பெனி…இஸ்ரேலியர்களின் பணத்தை வாங்கி அவர்களால் கொல்லப்படும் இஸ்லாமியர்களுக்கு உதவினால் போற வழியில் ஏதேனும் புண்ணியம் கிடைக்கும்னு ரஹ்மானிடம் சொல்லி வைங்கோ….”

  தகவலுக்கு நன்றி நண்பரே.

  உங்கள் வருகைக்கும்
  கருத்துக்கும்
  நன்றி கசீப்.

  Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: