இல்லம் > ALL POSTS, இசை, சினிமா > என் பெயர் என் மகளுக்கு ஒரு சுமை!-கமல்

என் பெயர் என் மகளுக்கு ஒரு சுமை!-கமல்


suruthi_kamal

‘கமல்ஹாஸன் மகள் என்பதால் என் மகளுக்கு எந்தச் சலுகையும் கிடைத்துவிடவில்லை. சொல்லப் போனால் அவருக்கு என் பெயர் ஒரு சுமைதான்’ என்கிறார் கலைஞானி கமல்ஹாஸன்.
தன் மகளைப் பற்றி சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், “ஸ்ருதியைப் போன்ற திறமையான இளம் பெண்களைப் பார்ப்பது அரிது. அவரது தந்தை என்ற பெருமிதத்தில் இப்படிச் சொல்லவில்லை. அது நடுநிலையாளர்களுக்கே புரியும். ஒரு வெளி நபராக இருந்து என் மகளை கவனித்து வந்துள்ளேன். எந்த உதவியும் வேண்டி என்னிடம் அவர் நின்றதில்லை. தனக்கான பாதையைத் தானே அமைத்துக் கொள்ளும் அளவு தன்னம்பிக்கையும் திறமையும் மிக்கவர் ஸ்ருதி”, என்று கூறியுள்ளார்.’லக்’ எனும் இந்திப் படத்தில் ஸ்ருதி நடிப்பதை உறுதி செய்த கமல், தற்போது இந்துஸ்தானி இசையை முழுமையாகக் கற்பதில் ஸ்ருதி தீவிரமாக உள்ளதாகக் கூறினார்.

தனது அடுத்த படமான ‘தலைவன் இருக்கின்றான்’ இசையமைப்பாளர் யார் என்பதை இதுவரை வெளியிடாமல் இருந்து வந்த கமல், முதல் முறையாக இந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

“இனியும் அதை ரகசியமாக வைத்திருப்பதில் அர்த்தமில்லை. ஆம்… என் மகள் ஸ்ருதிதான் எனது அடுத்த படமான ‘தலைவன் இருக்கின்றானு’க்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே அவரது இசையில் ஒரு பாடல் கூட கம்போஸ் செய்துவிட்டோம். அற்புதமாக வந்துள்ளது அந்தப் பாடல்” என்றார் கமல்.

கமல்ஹாஸன் மகள் என்பது ஸ்ருதிக்கு எந்த அளவு உதவியிருக்கிறது?

“இங்கே திறமை இருந்தாதான் ஜெயிக்க முடியும். என் மகள் என்பதற்காக எந்த வாய்ப்பும் வந்துவிடாது. இன்னும் சொல்லப்போனால், கமல்ஹாஸன் மகள் என்ற ‘பட்டம்’ ஸ்ருதிக்கு ஒரு சுமை என்றுகூடச் சொல்வேன்!”

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, இசை, சினிமா குறிச்சொற்கள்:,
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: