அமெரிக்காவில்,5-குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை:மனைவி வேறு ஒருவருடன் ஓடி விட்டதால் ஆத்திரம்
அமெரிக்காவில் தெற்கு சியாட்டில் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹரிசன்.இவரது மனைவி ஏஞ்சலா,இவர்களுக்கு மேக்சின் (16),சமந்தா(14),ஜோமி(11),ஹீதர்(8),ஜேம்ஸ்(7)ஆகிய 5-குழந்தைகள் இருந்தனர்.ஜேம்ஸ் ஹாரிசனுக்கும் ஏஞ்சலாவுக்கும் கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்தது.ஏஞ்சலா வேறு ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் அடிக்கடி தம்பதியரிடையே சண்டை ஏற்பட்டது.
நேற்று முன்தினம் அந்த வாலிபருடன் ஏஞ்சலா ஓடிவிட்டார்.இதனால் ஜேம்ஸ் ஹாரிசன் ஆத்திரமும்,வேதனையும் அடைந்தார்.நேற்று அவர் தன் 5-மகன்-மகள்களுடன் காரில் வெளியில் சென்றார்.அவ்பர்ன் என்ற பகுதியில் பூங்கா ஒன்றியல் காரை நிறுத்திய அவர்,தன் கைத்துப்பாக்கியால் 5-பேரையும் சுட்டார்.சம்பவ இடத்திலேயே 5-பேரும் பலியானார்கள்.
பிறகு ஜேம்ஸ் ஹாரிசன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் சியாட்டில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் கடந்த மாதம் அலபாமா,கலிபோர்னியா, நியூயார்க், வடக்கு கரோலினா மாகாணங்களில் அடுத்தடுத்து ஒரே சமயத்தில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் மீண்டும் ஒரே குடும்பத்தில் 6-பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டனர்.
அண்மைய பின்னூட்டங்கள்