இல்லம் > ALL POSTS, அரசியல், உலகம் > அல்-குவைதா, தலிபான்களை ஒழியுங்கள்: பாக்-ஆப்கனுக்கு உதவ ஒபாமா நிபந்தனை

அல்-குவைதா, தலிபான்களை ஒழியுங்கள்: பாக்-ஆப்கனுக்கு உதவ ஒபாமா நிபந்தனை


hameed_obama_zardari

அல்-குவைதா மற்றும் தலிபான்கள் போன்ற பயங்கரவாத அமைப்புகளை ஒழித்துக் கட்டுவதோடு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ரீதியான அரசுகள் நீடிக்கவும், அமெரிக்கா ராணுவம் மற்ற நிதி ஆதரவு தரும் என, அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் ஆகியோருடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் பேச்சுவார்த்தை நடத்திய அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது:

அல்-குவைதா மற்றும் தலிபான்களை தோற்கடிப்பது, அந்த அமைப்புகளை சீர்குலைப்பது மற்றும் சின்னாபின்னமாக்குவது என்பதே அமெரிக்காவின் லட்சியம். இந்த லட்சியத்தை அடைவது எளிதான காரியம் அல்ல.

இருந்தாலும், அமெரிக்கா அதை உறுதியாகச் செய்யும். இந்த இரு அமைப்புகளையும் தோற்கடிக்கும். அதே நேரத்தில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசுகள் நீடிக்கவும் ஆதரவு தரும்.

ராணுவம் மற்ற உதவிகளும் தரப்படும். அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அறிந்து, இந்த இரு நாடுகளும் தலிபான்கள் மற்றும் அல்-குவைதா அமைப்பினருக்கு தங்கள் நாட்டில் இடம் தரக்கூடாது.

அல்-குவைதா மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால், எதிர்காலத்தில் வன்முறைகளும், பின்னடைவுகளும் ஏற்படலாம். இருப்பினும், அவற் றை எல்லாம் அமெரிக்கா முறியடித்து வெற்றி கொள்ளும்.

ஆப்கன் மற்றும் பாகிஸ் தான் அதிபர்களுடன் தற் போது நடந்துள்ள முத்தரப்புக் கூட்டம் ஒரு துவக்கமே. இன்னும் பல கூட்டங்கள் நடக்கலாம். மேலும், பயங்கரவாதத்தை ஒழிக்க நிறைய செய்ய வேண்டியுள்ளது.

ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலாவுகின்றனர். இதனால், அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கன் ஆகிய மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, உளவுத் தகவல்களையும் பரிமாறிக் கொண்டு, நமது பொது எதிரியான பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். இவ்வாறு ஒபாமா கூறினார்.

  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: