இல்லம் > ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு > வெளியேறியது கொல்கத்தா

வெளியேறியது கொல்கத்தா


kolkatateam

ஜோகனஸ்பர்கில் நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பை முழுமையாக இழந்தது.

விரல் காயத்தால் அவதிப்பட்டு வரும் டெல்லி கேப்டன்ஷேவாக் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் கவுதம் கம்பீர் முதலில் கொல்கத்தா அணியை பேட் செய்ய பணித்தார். இதன்படி கேப்டன் மெக்கல்லமும், முன்னாள் கேப்டன் கங்கூலியும் கொல்கத்தாவின் இன்னிங்சை தொடங்கினார்கள்.

நெஹ்ராவின் முதல் ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய மெக்கல்லம், அதற்கு அடுத்த பந்தில் நடுவர் சுரேஷ் சாஸ்திரியின் தவறான எல்.பி.டபிள்யூ முடிவுக்கு பலியானார். டி.வி. ரீப்ளேயில் பந்தை ஸ்டம்பை விட்டு விலகி செல்வது தெரிந்தது. இதனால் ஏமாற்றத்துடன் மெக்கல்லம் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து இறங்கிய பிராட் ஹாட்ஜ் (0) அதே ஓவரில் கேட்ச் ஆனார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான கொல்கத்தா அணி, வீழ்ச்சியில் இருந்து மீள கடுமையாக போராடியது. கங்கூலி ஒரு பக்கம் போராட, மறுபுறம் மளமளவென விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.

இதன் பின்னர் இறுதி கட்டத்தில் அஜீத் அகர்கர் அணிக்கு கைகொடுத்தார். அகர்கரும் ஒரு ரன்னில் இருந்த போது கங்கூலியால் எளிதாக ரன்-அவுட் ஆகி இருக்க வேண்டியது. தில்ஷனின் தவறினால் தப்பினார். கங்குலி 44 ரன்கள் (45 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு அகர்கரின் அதிரடியால் கொல்கத்தா அணி 100 ரன்களை கடந்தது. 21 ரன்னில் இருந்த போது மீண்டும் ஒரு முறை `கண்டத்தில்’ இருந்து தப்பித்த அகர்கர், இறுதியில் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 39 ரன்கள் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியில் 4 வீரர்கள் தவிர மற்ற யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை.

டெல்லி அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுகளும், நெஹ்ரா, திர்க் நேன்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் டெல்லி அணிக்கு கேப்டன் கம்பீரும், டேவிட் வார்னரும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தனர். இதனால் டெல்லி அணி நெருக்கடியின்றி வெற்றி நோக்கி பயணித்தது. முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த ஜோடியில் முதல் விக்கெட்டாக கம்பீர் (18 ரன், 24 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

இதை தொடர்ந்து வார்னர் (36 ரன், 23 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), தில்ஷன் (1 ரன்) ஆகியோர் இஷாந்த் ஷர்மாவின் ஒரே ஓவரில் வீழ்ந்ததால், கொல்கத்தா வீரர்கள் சற்று நம்பிக்கையுடன் காணப்பட்டனர். ஆனால் 4-வது விக்கெட்டுக்கு இணைந்த டிவில்லியர்சும், தினேஷ் கார்த்திக்கும் அவர்களின் நம்பிக்கையை தகர்ந்தெறிந்தனர்.

இந்த வெற்றி மூலம் டெல்லி டேர் டெவில்ஸ் அணி 9 ஆட்டங்களில் 7 வெற்றியுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது.

ஆட்ட நாயகனாக 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய அமித் மிஷ்ரா தேர்வு செய்யப்பட்டார்.

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: