இல்லம் > ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு > குரோனியேவை சூதாட்டத்தில் சிக்கவைத்த நபர் ஐ.பி.எல். போட்டியில்

குரோனியேவை சூதாட்டத்தில் சிக்கவைத்த நபர் ஐ.பி.எல். போட்டியில்


Hansie

வாண்டரர்ஸ் மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஐ.பி.எல். கீரிக்கெட் போட்டியைக் காண 2000ஆம் ஆண்டின் புகழ் பெற்ற கிரிக்கெட் சூதாட்டத்தில் மறைந்த தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் ஹேன்சி குரோனியேவை இந்திய சூதாட்டக் காரருக்கு அறிமுகப்படுத்திய ஹமித் காஸிம் என்ற நபர் பார்வையாளராக வந்திருந்தது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் வெள்ளை நிற டி-ஷர்ட்டும், கண்ணாடியும் அணிந்து கொண்டு வந்தபோதும் நிருபர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு பழைய விவகாரத்தை மீண்டும் கிளற விரைந்தனர்.

ஆனால் அவர் மிகவும் கூலாக பத்திரிக்கையாளரிடம் கை குலுக்கிவிட்டு ஹவ் ஆர் யூ? என்று வினவினார்.

பிறகு மேதுவாக மற்ற பத்திரிக்கையாளர்களும் அவரை அடையாளம் கண்டு கொள்ள அவர் கேள்விகள் எதுவும் வேண்டாம் என்று வன்மையாக மறுத்தார்.

“நான் இங்கு கிரிக்கெட் போட்டியை பார்க்க மட்டுமே வந்துள்ளேன், நான் இன்று மட்டும் வரவில்லை, இந்த ஐ.பி.எல். போட்டியில் சில போட்டிகளை நேரில் பார்க்க வந்திருக்கிறேன் எனவே பழைய விஷயங்களை கிளற வேண்டாம், நான் ஒரு புதிய வாழ்விற்குள் அடியெடுத்து வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இருப்பினும் பத்திரிக்கையாளர் கூட்டம் நெருக்கவே சிறிது நேரம் கழித்து அவர் சொல்லாமல் கொள்ளாமல் இடத்தைக் காலி செய்தார்.

ஆனால் மிகவும் சுவாரஸ்யமானது என்னவெனில் அன்றைய தினம் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் 2000 ஆம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய ஹெர்ஷல் கிப்ஸ் விளையாடினார்.

இவர் அந்த புகழ் பெற்ற கிரிக்கெட் சூதாட்டத்தில் மோசமாக விளையாட தன் அணித் தலைவர் குரோனியேவிடமிருந்து தான் பணம் பெற்றதை ஒப்புக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பிராட் ஹாட்ஜ் விருந்தினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு போட்டியின் போது அமர்ந்திருந்தது சூதாட்டத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள நிலையில் சூதாட்டப் புகழ் ஹமித் காசிமின் வரவு புதிய பரபரப்பையும் தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:,
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: