இல்லம் > ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு > மண்ணை கவ்வியது சென்னை அணி : பைனலில் பெங்களூரு-டெக்கான் மோதல்

மண்ணை கவ்வியது சென்னை அணி : பைனலில் பெங்களூரு-டெக்கான் மோதல்


chennai-vs-banglore

ஐ.பி.எல்., தொடரில் இருந்து தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபமாக வெளியேறியது. நேற்று நடந்த முக்கியமான அரையிறுதி போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந் தது.

கேப்டன் கும்ளே தலைமையில் மகத்தான எழுச்சி கண்ட பெங்களூரு அணி பைனலுக்கு அசத்தலாக முன்னேறியது. இன்று நடக்கும் பைனலில் டெக்கான்-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

தென் ஆப்ரிக்காவில் ஐ.பி.எல்., இரண்டாவது “டுவென்டி-20′ தொடர் நடக்கிறது. முதலாவது அரையிறுதியில் டெக்கான் அணி, டில்லி அணியை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது அரையிறுதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. காயம் குணமான நிலையில் சென்னை அணியில் ஹைடன் இடம் பெற்றார். டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கும்ளே, பீல்டிங் தேர்வு செய்தார்.

பார்த்திவ் விளாசல்: சென்னை அணிக்கு பார்த்திவ் படேல் அதிரடி துவக்கம் தந்தார். காலிஸ் வீசிய இரண்டாவது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். பின்னர் பிரவீண், வினய் குமார் ஓவரிலும் தலா இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் அடக்கி வாசித்த ஹைடன்(26) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சிறிது நேரத்தில் பார்த்திவ் படேலும்(36) வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் ஏனோ தானோ என ஆடினர்.

வினய் குமார் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த ரெய்னா(20) பெரிதாக சாதிக்கவில்லை. ஒரு நாள் போட்டி போல மந்தமாக பேட் செய்த கேப்டன் தோனி(28), மெர்வி பந்தை தூக்கி அடிக்க, வினய் குமார் எல்லைக் கோட் டுக்கு மிக அருகே அபாரமாக “கேட்ச்’ பிடிக்க பரிதாபமாக வெளியேறினார். ஓரம்(9) மீண்டும் சொதப்பினார். “டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற ஸ்கோர் அப்படியே படுத்தது. கடைசி கட்டத்தில் ஆல்பி மார்கல் ஓரளவுக்கு கைகொடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்தது. ஆல்பி மார்கல்(20), பத்ரிநாத்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.

பாண்டே அபாரம்: சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணி துவக்கத்தில் திணறியது. கோனி வேகத்தில் காலிஸ்(9) வீழ்ந்தார். மெர்வி(2) ஏமாற்றினார். இதற்கு பின் மனிஷ் பாண்டே, அனுபவ டிராவிட் இணைந்து அதிரடியாக ஆடினர். ஐ.பி.எல்., தொடரில் முதல் சதம் அடித்த இந்தியர் என்ற பெருமையோடு களமிறங்கிய பாண்டே பிரமாதமாக பேட் செய்தார். கோனி வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். ஜகாதி வீசிய அடுத்த ஓவரில் டிராவிட் தன் பங்குக்கு 2 பவுண்டரி விளாசினார். இவர்களது சூப்பர் ஆட்டம் தொடர, சென்னை கேப்டன் தோனி செய்வதறியாது திகைத்து போனார். பாண்டே 48 ரன்களுக்கு ஜகாதி பந்தில் போல்டானார். பின்னர் முரளிதரன் சுழலில் டிராவிட்(44) அவுட் டாக, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

கோஹ்லி அதிரடி: ஆனால் ரெய்னா வீசிய 17வது ஓவரில் ரோஸ் டெய்லர், விராத் கோஹ்லி தலா ஒரு சிக்சர் விளாச, போட்டி பெங்களூரு வசம் வந்தது. முரளிதரன் பந்திலும் ஒரு சிக்சர் அடித்தார் விராத் கோஹ்லி. ஓரம் பந்தில் கோஹ்லி ஒரு பவுண்டரி அடிக்க, பெங்களூரு அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை மனிஷ் பாண்டே வென்றார். கடந்த முறை லீக் சுற்றில் 7ம் இடம் பெற்ற பெங்களூரு அணி, இம்முறை பைனலுக்கு முன்னேறி சாதித்துள்ளது. கடந்த முறை பைனலுக்கு தகுதி பெற்ற சென்னை அணி, இம்முறை அரையிறுதியோடு நடையை கட்டியுள்ளது. இன்று நடக்கும் பைனலில் பெங்களூரு அணி, டெக்கான் அணியை சந்திக்கிறது.

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: