இல்லம் > ALL POSTS, சினிமா > மணிரத்னம் அடிக்காத காப்பியா? சீறும் ஷக்தி சிதம்பரம்

மணிரத்னம் அடிக்காத காப்பியா? சீறும் ஷக்தி சிதம்பரம்


ராஜாதிராஜாவை விமர்சனம் என்ற பெய‌‌ரில் அடித்து துவைத்து காயப் போட்டாலும் போட்டார், சுஹாசினி என்ற பெயரை கேட்டாலே ஹிஸ்டீ‌ரியா பேஷ‌ண்டாகி விடுகிறார் ஷக்தி சிதம்பரம்.
ராஜாதிராஜா தமிழ் சினிமாவை 20 வருடங்கள் பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டது என்றதும், எம்.‌ஜி.ஆரை ர‌ஜினி காப்பியடித்தார், ர‌ஜினியை விஜய் காப்பியடித்தார் என்று சுஹாசினி விமர்சனத்தில் சொன்னதும்தான் அவரை ரொம்பவே பாதித்திருக்கிறது.

maniratnam
காயத்துக்கு களிம்பு போடுவதாக நினைத்து மணிரத்னத்தை சகட்டுமேனிக்கு காய்ச்சியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். அவரது கேள்வி இதுதான். என்னுடைய படத்தை குறை சொல்லும் சுஹாசினியின் கணவர் மணிரத்னத்தின் படங்கள் மட்டும் என்ன புதுமையானவையா? மணிரத்னம் அடிக்காத காப்பியா?

இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்பு நடந்த ராமாயண கதையை காப்பியடித்து ராவண் படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். மகாபாரதத்தில் து‌ரியோதனன், கர்ணன் நட்பை உல்டா செய்து தளபதி பண்ணினார். பாக்யரா‌ஜின் அந்த ஏழு நாட்கள் படத்தை மௌனராகமாக்கினார். அவ‌‌ரிடம் போய் ஏன் பழைய விஷயங்களை படமாக்குகிறீர்கள் என்று கேட்பதுதானே என கேள்‌வி எழுப்பியுள்ளார் ஷக்தி சிதம்பரம்.

சஹாசினியின் விமர்சனத்தால் ஒரு சில‌‌ரின் காப்பி விவகாரங்கள் வெளியே வந்திருக்கிறது. ஒருசிலரே இத்தனை காப்பியடித்திருந்தால், ஒட்டு மொத்த தமிழ் திரையுலகம்…? தாங்காதுடா சாமி.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:,
  1. 4:37 பிப இல் 2009/06/13

    ஷக்தி சிதம்பரம் கூறுவது சரியானது.கன்னத்தில் முத்தமிட்டால் படம் கூட இலங்கையில் ஒருவர் எழுதி வைத்திருந்த நாவலை பிரதி பண்ணியே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதை,அந்த நாவலை எழுதியவர் பின்வருமாறு வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

    ”மணிரத்னம் இலங்கை வந்த போது என் வீட்டுக்கு வந்திருந்தார்.அவரிடம் எனது நாவலைப்பற்றிக் குறிப்பிட்டேன்.அவர் அதைப் பார்த்து விட்டு அந்தக்கதையை தான் படமாக எடுக்க இருப்பதாகவும் அந்தப்படத்தின் திரைக் கதாசிரியராக உங்கள் பெயரை குறிப்பிடுவதாகவும் கூறினார்.நானும் சம்மதித்தேன் படம் திரைக்கு வந்த போது படத்தைப்பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.படத்தின் திரைக்கதாசிரியராக மணிரத்னம் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.”

    Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: