இல்லம் > ALL POSTS, இசை, உலகம் > மைக்கேல் ஜாக்சன் மரணம்

மைக்கேல் ஜாக்சன் மரணம்


michael_jackson_

இப்படியொரு ஆட்டக்காரரை இனி பார்க்கமுடியும் என்பது சந்தேகம்தான். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்பதற்கு
அர்த்தமாய் விளங்கிய மைக்கேல் ஜாக்சன் மறைந்துபோனார்.

நாட்டியமன்னனின் குவா குவா… குரல் ஒலித்தது 1958-ம் ஆண்டு. பாலகனாக இருக்கும்போதே தொலைதூரத்தில் ஒலிக்கும் பாடல்களுக்கு தாளம்போட ஆரம்பித்த இவரது கால்கள்தான் பின்னாளில் இவருக்கு பெரும் புகழைத் தேடித்தரும் சொத்து என்பது மைக்கலே ஜாக்சனே அறியாதது.

michael-jackson-

அமெரிக்காவில் பாடிக்கொண்டே நடனமாடும்முறை அறிமுகமானபோது பெரும் நடனப்புயலாய் உருவெடுத்தார் மைக்கேல ஜாக்சன். இவரது நிகழ்ச்சிக்கு டிக்கெட் கிடைக்காமல்போய் தற்கொலை முயற்சி செய்த ரசிகர்கள்கூட உண்டு. உலகம் முழுவதும் ரசிகர்களை பெருக்கிக்கொண்ட ஜாக்சனின் ஆல்பங்களில் உருகிய உள்ளங்கள் கோடான கோடி.

இவரது நடனம் தலைப்புச்செய்தியாவதென்பது சர்வசாதாரணம். இன்றும் தலைப்பு செய்தியாகிவிட்டார் மைக்கேல் ஜாக்சன். இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜாக்சன் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மருத்துவமனைக்கு போகும் நிலைக்கு ஆளானார். நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்படவே, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

michael_jackson_

தீவிர சிகிச்சை அளித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. கடைசியில் கோடிக்கணக்கான நெஞ்சங்களை கனமாக்கும் செய்தியை அறிவித்தனர் மருத்துவர்கள். மைக்கேல் ஜாக்சன் மறைந்து விட்டார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.

மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்த செய்தியை கேட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு முன்பு கூடி கண்ணீர் விட்டு அழுத காட்சி பெருஞ்சோகம்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, இசை, உலகம் குறிச்சொற்கள்:,
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: