இல்லம் > ALL POSTS, சினிமா > அஜீத்தின் குரலில் அசல் பாட்டு?

அஜீத்தின் குரலில் அசல் பாட்டு?


ajith

அண்டங்காக்கா தொண்டைக்காரிகளுக்கு மட்டுமல்ல, அண்டங்காக்கா தொண்டைக்காரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்
டைரக்டர்கள்! ஒரு சைஸ்சா ஐஸ் வைக்கிற மெத்தர்டுதான் இது என்றாலும், விக்ரம் மாதிரி ஹீரோக்கள் காட்டில் ஒரே பாராட்டு மழை அடிக்கிறது. எல்லாம் கந்தசாமி படத்தின் கான மழையை பாராட்டிதான்! இப்போது போலவே இனிவரும் தனது படங்களில் ஒரு பாடலாவது பாடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சீயான்.

நேரில் பார்த்துக் கொண்டால் ஒரு ஹலோ சொல்வதோடு நிறுத்திக் கொள்வதும், அதிகபட்சமாக இரண்டு மூன்று வார்த்தைகள் பேசுவதுமாக ஆகிவிட்டது சீயான்-தல இடையிலான நட்பு. இருவரும் ஒரே படத்தில் நடித்திருந்தாலும், ஒரு கட்டத்தில் தலயை முந்திக் கொண்டு ஓட்டம் போட்டார் சீயான். அந்த கால கட்டங்களில் பல்லை கடிப்பதும், நகத்தை துப்புவதுமாக காணப்பட்டார் தல. இருந்த நூலிழை நட்பும் அறுந்து போனது. அதெல்லாம் சரியாகி இயல்பு நிலைக்கு தல திரும்பியது இப்போதுதான். அதுவும் மீண்டும் ஹிட் கொடுக்க துவங்கியதற்கு பிறகு. சரி, பழச கிண்டி பலகாரம் பொறிக்கறதை விட்டுட்டு மேட்டருக்கு வா என்கிறீர்களா? வந்திருவோம்.

கந்தசாமி படத்தில் விக்ரம் நான்கு பாடல்கள் பாடியதை தொடர்ந்து, அசல் படத்தில் அஜீத்தை பாட வைக்கும் முயற்சியில் இருக்கிறார் சரண்.
கேக்கறதோட சரி. முணுமுணுக்கிற வழக்கம் கூட இல்லாத அஜீத், எதுக்கு சார் வம்பு? என்கிறாராம். தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார் சரண்.
எறும்பு ஊற கல்லு தேயுதா? அல்லது எறும்போட காலு தேயுதாங்கிறது போக போகதான் தெரியும்!

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:,
 1. 8:08 பிப இல் 2009/07/06

  Hi ajith

  Like

 2. pirabuwin
  12:13 பிப இல் 2009/07/08

  உங்கள் வருகைக்கும்
  கருத்துக்கும்
  நன்றி கற்பகம்-அகிலா.

  Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: