இல்லம் > ALL POSTS, விளையாட்டு > இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து அபார வெற்றி


ashes

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் சிறப்பாகப் பந்து வீசி 5 விக்கெட் கைபற்றினார்.

போட்டியின் கடைசி நாளான இன்று வெற்றி பெற 209 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்ட்ரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த பிராட் ஹட்டின் இன்று ரன் எதுவும் எடுக்காமல் பிளின்டாஃப் பந்தில் வெளியேறினார்.

இதையடுத்து மைக்கேல் கிளார்க் உடன் மிட்செல் ஜான்சன் இணைந்தார். இந்த இணையும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. கிளார்க் 136 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வான் பந்தில் போல்ட் ஆனார்.

கடைநிலை ஆட்டக்காரர்களான ஹாரிட்ஸ் ஒரு ரன், சிடில் 7 ரன் எடுத்து பிளின்டாஃப் பந்தில் போல்ட் ஆகினர். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த மிட்செல் ஜான்சன் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வான் பந்தில் போல்ட் ஆனதால் ஆஸ்ட்ரேலியா 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்தத் தோல்வியின் மூலம் கடந்த 75 ஆண்டுகளாக லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்காத அணி என்ற வரலாற்றுப் பெருமையை ஆஸ்ட்ரேலியா இழந்துவிட்டது.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் பிளின்டாஃப் 5 விக்கெட், ஸ்வான் 4 விக்கெட், பிராட் ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற போட்டிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. பிளின்டாஃப் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, விளையாட்டு குறிச்சொற்கள்:,
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: