இல்லம் > ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு > ஊக்க மருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு

ஊக்க மருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு


cricketஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் உலக ஊக்க மருந்து எதிர்ப்பு கழகத்தின் (WADA) படிவத்தில் வீரர்கள் கையெழுத்திட வேண்டும் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருந்தது. ஆனால் முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட மறுத்துள்ளதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது பிரச்சனையில் உள்ளது.

அதாவது உலக ஊக்க மருந்து எதிர்ப்புக் கழகத்தின் விதிகளின் படி ஒவ்வொரு வீரரும் தினமும் ஒரு மணி நேரம் ஊக்க மருந்து சோதனை செய்துகொள்ளவேண்டும். இதற்காக இவர்கள் உலக ஊக்க மருந்து எதிர்ப்பு கழக அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக வேண்டும்.

இதனால் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை ஊக்க மருந்து எதிர்ப்பு கழகத்திற்கு தெரியப்படுத்துவது அவசியமாகிறது. இதனை ஏற்கனவே டென்னிஸ் வீரர்கள் பலர் எதிர்த்து வரும் நிலையில், தற்போது சில இந்திய கிரிக்கெட் வீரரகளும் கையெழுத்திட மறுக்கின்றனர்.

இந்த ‘தெரியபடுத்தும்’ விதிமுறைதான் வீரர்களை பின் வாங்கச் செய்துள்ளது. அதாவது இது தங்கள் சொந்த வாழ்வில் தலையிடுவதற்கு சமம் என்று வீரர்கள் கருதுகின்றனர். மேலும் கிரிக்கெட் தொடர்கள் இல்லாத நாட்களில் தங்களது பயணத் திட்டம் என்ன, எங்கு இருப்போம் என்பதெல்லாம் தங்களுக்கு முன் கூட்டியே தெரிய வாய்ப்பில்லை இதனால் 2 மாதங்களுக்கு முன்பே தங்களது இருப்பிடம் பற்றி கூற முடியாது என்றும் அவர்கள் ஒரு வாதத்தை முன்வைத்துள்ளனர்.

உலக ஊக்க மருந்து எதிர்ப்புக் கழக விதிமுறைகளின் படி 18 மாதங்களில் 3 முறை ஊக்க மருந்து சோதனைகளை தவிர்க்கும் வீரர்கள் 2 ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுவார்கள்.

இந்த பிரச்சனைகளையெல்லாம் பி.சி.சி.ஐ. யிடம் வீரர்கள் எடுத்துக் கூறியுள்ளதாகவும் இதற்கு ஆவன செய்யப்படும் என்றும் பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக