ரஜினிக்காக காத்திருக்கும் வாசு
ரஜினியை வைத்து ‘சந்திரமுகி’யை வெற்றிப் படமாக்கிய வாசு, ‘சந்திரமுகி பாகம் 2’ எடுப்பதற்கு தயாராக இருக்கிறார். இது பற்றி ரஜினியிடமும் பேசிவிட்டார்.
ஆனால் ரஜினி இதுவரை பதில் எதுவும் சொல்லவில்லை. ரஜினி ஓ.கே. சொல்லிவிட்டால் அடுத்த கணமே வாசு பரபரப்பாகி விடுவார். ‘எந்திரன்’ படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி ‘இனிமேல் நடிக்கமாட்டார். இதுவே கடைசி படம்‘ என்ற தகவல் இப்போது மெல்ல கசிய ஆரம்பித்துள்ளது.
இதனால் மிரண்டு போன வாசு, ரஜினி ஓ.கே. சொல்லமாட்டாரா என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறார். ஜோதிகா நடித்த கேரக்டருக்கு விமலாராமனையும், நயன்தாரா, வடிவேலு கேரக்டர்களை அவர்களே வைத்தும் இந்தப் படத்தை உருவாக்குவார்கள் என்றும் தெரிகிறது.
Advertisements
பின்னூட்டங்கள் (0)
Trackbacks (0)
பின்னூட்டமொன்றை இடுக
Trackback
அண்மைய பின்னூட்டங்கள்