இல்லம் > ALL POSTS, உலகம், புகைப்படங்கள் > செல்சியா திருமணம்!!

செல்சியா திருமணம்!!


அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தம்பதியின் ஒரே மகளான செல்சியாவின் திருமணம் நியூயார்க்கில் பிரமாண்டமாகவும், கோலாலமாகவும் நடந்தேறியது.

அமெரிக்காவின் ராயல் கல்யாணம் என மீடியாக்களால் பெரிதும் பேசப்பட்டது இந்த திருமணம். யூதரான மார்க் மெஸ்வின்ஸ்கியை மணந்துள்ளார் செல்சியா. இருவரும் இளம் வயது முதலே பழகி வந்தனர். செல்சியாவுக்கு 30 வயதாகிறது, மார்க் 32 வயதுக்காரர்.

இவர்களது திருமணம், நியூயார்க்கின் மன்ஹாட்டனிலிருந்து 2 மணி நேர பயண தூரத்தில் இருக்கும் ரைன்பெக் என்ற இடத்தில் நடந்தது.
ஹட்சன் நதிக்கரையோரம் உள்ள பிரமாண்ட எஸ்டேட் வளாகத்தில் இத்திருமணம் நடந்தது. மிகுந்த பாதுகாப்புடன் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை.

மார்க் இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் பணியாற்றி வருகிறார். அவரது தந்தை எட்வர்ட் மெஸ்விந்ஸ்கி, தாயார் மர்ஜோரி மர்கோலிஸ். இருவரும் ஜனநாயகக் கட்சியின் எம்.பிக்களாக இருந்தவர்கள்.

கிளிண்டன் மெத்தடிஸ்ட் வகுப்பைச் சேர்ந்தவர், மார்க் யூதர் என்பதால் இந்தத் திருமணம் இரு மத முறைப்படி நடந்தது. யூதமுறைப்படியான சடங்குகளை ரப்பி ஜேம்ஸ போனட்டும், மெத்தடிஸ்ட் முறைப்படியான வைபவத்தை பாதிரியார் வில்லியம் ஷில்லடியும் செய்தனர்.

கிளிண்டன் தம்பதியின் ஒரே மகள் செல்சியா என்பதாலும், அமெரிக்க அதிபர் பதவியில் கிளிண்டன் இருமுறை இருந்தவர் என்பதாலும் அமெரிக்க மக்களின் செல்ல மகளாக செல்சியா பார்க்கப்படுகிறார். இதனால் அவரது திருமணம் அமெரிக்க மக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: