இல்லம் > ALL POSTS, உலகம் > காமன்வெல்த் போட்டியில் ஊழல்: பிரிட்டன் மகாராணி அதிர்ச்சி!

காமன்வெல்த் போட்டியில் ஊழல்: பிரிட்டன் மகாராணி அதிர்ச்சி!


காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், காமன்வெல்த் போட்டியில் நடந்த முறைகேடுகள் குறித்து அறிந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்ககை மேற்கொள்ளுமாறு அரசுத் துறையை அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இங்கிலாந்து வரி மற்றும் வருவாய்த்துறையிடம் விசாரணை நடந்து வருகிறது.

டெல்லியில் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடக்க உள்ள காமன்வெல்த் போட்டிக்கான ஜோதி கடந்த அக்டோபர் மாதம் லண்டனில் இருந்து புறப்பட்டது. இதற்கான தொடக்க விழாவில் மகாராணி எலிசபெத் கலந்துகொண்டு ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கான வாகன ஏற்பாட்டை லண்டனில் உள்ள ஏ.எம். பிலிம்ஸ் செய்திருந்தது. இந்தப் பணியில்தான் பெரும் ஊழல் நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காமன்வெல்த் ஜோதி ஓட்டத்திற்காக வாகனம் ஏற்பாடு செய்வதில் வழக்கத்தை விட பலமடங்கு தொகை இந்நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது. அதுவும் அந்தத் தொகை பிரிட்டனில் உள்ள ஏ.எம். பிலிம்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தான் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் நிதி முறைகேடு நடந்தது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் பிரிட்டன் மகாராணியார் எலிசபெத். இதன் விளைவாக முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனம் மற்றும் பிரிட்டன் வரி வருமானத்துறை யின் மீதும் உயர் துறைகளின் பார்வை இறுகியுள்ளது.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, உலகம்
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: