இல்லம் > ALL POSTS, சினிமா > எந்திரனுக்காக அக் 22 வரை புதுப்பட ரிலீஸ் நிறுத்தி வைப்பு

எந்திரனுக்காக அக் 22 வரை புதுப்பட ரிலீஸ் நிறுத்தி வைப்பு


எந்திரன் ரிலீஸ் காரணமாக வரும் அக்டோபர் 22-ம் தேதிக்குப் பிறகுதான் புதிய படங்களை வெளியிடுவது என தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர்.

உலகமெங்கும் கடந்த 1-ம் தேதி வெளியான எந்திரன் திரைப்படம் பெரிய அளவில் வசூலைக் குவித்து வருகிறது. இதனால் திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு கூறுகையில், “ரஜினியைத் தவிர யாரையும் நம்பி இத்தனை கோடியை விநியோகஸ்தர்களான எங்களால் போடவும் முடியாது. மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. எனவே அடுத்த மூன்று – நான்கு வாரங்களுக்கு வேறு புதிய படங்களை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். அனைத்து தயாரிப்பாளர்களும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்…” என்றார்.

அபிராமி ராமநாதன் கூறுகையில், “இந்த ஆண்டு மொத்தமே 3 படங்கள்தான் பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு ஓடின. ஆனால் அந்த குறைகளையெல்லாம் போக்கி, இந்தத் தொழிலை மீண்டும் நிமிர வைத்துள்ளது ரஜினியின் எந்திரன் என்றால் மிகையல்ல. அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் புத்துணர்ச்சி பெற்றுள்ளனர் ” என்றார்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா
  1. 2:01 பிப இல் 2010/10/12

    ஏதோ ஒன்னு ஓடுது. எத்தனை நாள்தான் இந்தக் காதல் கன்றாவியெல்லாம். இயக்குனர்களே வேற எதையாவது யோசிங்க.

    Like

    • 11:00 முப இல் 2010/10/15

      அருமையான கருத்துக்கள்
      புரிய வேண்டும் இயக்குனர்களுக்கு.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கு
      நன்றி ஜெகதீஸ்வரன்.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: