இல்லம் > ALL POSTS, சிறுகதை > உண்மைக்காதலர்கள் (சிறுகதை)

உண்மைக்காதலர்கள் (சிறுகதை)


பூவரசனும் யாழினியும் இணைபிரியாக்காதலர்கள்.ஒருவரை ஒருவர் மனதாரக்காதலித்து வருகின்றனர்.

நாட்கள் நகர்கின்றன.திடீரென இவர்கள் காதலிலும் பூகம்பம் வெடிக்கின்றது.அது யாழினி மூலம் நடக்கின்றது. பூவரசனை சந்திக்கும் யாழினி நான் உங்களை விரும்பவில்லை என்றும் நண்பியாகத்தான் உங்களிடம் பழகி வந்தேன் என்றும் தெரிவிக்கின்றாள். நொறுக்கிபோகின்றான் பூவரசன்.ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றாய் என வினவுகின்றான். அதற்கு அவள் “நீங்கள் நட்பாக பழகியதை தவறாக அர்த்தம் கொள்கின்றீர்கள்.காதலுக்கும் நட்புக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை “என்கின்றாள். நீண்ட சொற் பரிமாற்றத்துக்கு பின் தனது காதலிக்கு பிரியாவிடை அளிக்கின்றான் பூவரசன்.

நாட்கள் நகர்கின்றன.பூவரசனின் நண்பன் வேந்தன் பூவரசனிடம் ஓடி வருகின்றான்.பூவரசா விஷயம் தெரியுமா என்று கேட்கின்றான்.என்ன என்கின்றான் பூவரசன்.யாழினி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாள் என்கின்றான். புழுவாய்த்துடித்த பூவரசன் மருத்துவமனை விரைகின்றான்.

யாழினியை சென்று பார்க்கின்றான்.ஆறாத்துயரில் மூழ்குகின்றான். அவள் கடந்த மாதம் தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டால் என்றும் இன்னும் ஒரு வருடம் தான் உயிருடன் இருப்பாள் என்றும் வைத்தியர் மூலம் அறிகின்றான் பூவரசன்.

பூவரசன் ஆழ்ந்த யோசனையில் இருக்கின்றான்.இந்த நோய் காரணமாகவே யாழினி தன்னை வெறுத்தால் என்பதை அவனது ஆறாம் அறிவு அவனுக்கு புலப்படுத்தியது. யாழினியின் நண்பி ரேவதியிடம் துளாவினான் பூவரசன்.அவளும் ஆறாம் அறிவு புலப்படுத்திய உண்மையை மெய்யாக்கினாள். அவளின் காதலின் ஆழத்தை உணர்ந்த பூவரசன் ஆனந்தக் கண்ணீர் விட்டான்.

யாழினி மருத்துவமனையிலிருந்து வீடு செல்கின்றாள். யாழினியின் பெற்றோரிடம் செல்லும் பூவரசன் தனக்கு எல்லா விடயமும் தெரியும் என்றும் தான் யாழினியை திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவிக்கின்றான். அவன் தன மீது கொண்ட உண்மை அன்பை உணர்ந்து சம்மதிக்கின்றாள் யாழினி.

திருமணம் இனிதே நடைபெறுகின்றது.யாழினியின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர்.யாழினியின் கண்களில் மட்டுமல்ல திருமணத்துக்கு வருகை தந்த அனைவரின் கண்களிலிருந்தும் தான்.

 

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சிறுகதை குறிச்சொற்கள்:
 1. 1:38 பிப இல் 2011/01/21

  கதை நல்லாயிருக்கு நண்பரே. ஆனால் நீங்கள் ஏன் ஒரு செய்தி போல 3rd person view-லேயே எழுதுகிறீர்கள். அதை மாற்றியும் எழுதிப் பாருங்கள். கதை இன்னும் சிறப்பாக தெரியுமே! இதை ஒரு ஆலோசனையாகவே சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்!

  Like

  • 4:28 பிப இல் 2011/01/22

   உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.இனிமேல் நான் நிச்சயம் நீங்கள் கூறுவது போல் மாற்றி எழுகிறேன்.உங்கள் அறிவுரைகள் எப்பொழுதும் வரவேற்கப்படுகின்றன.

   நன்றி நண்பரே!

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி எஸ். கே.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: