இல்லம் > ALL POSTS, உலகம், ஊடகம் > யாழ்ப்பாணத்தில் தமிழ் ஒலிபரப்பு சேவைகளை ஆரம்பிக்க அமெரிக்கா, சீனா திட்டம்

யாழ்ப்பாணத்தில் தமிழ் ஒலிபரப்பு சேவைகளை ஆரம்பிக்க அமெரிக்கா, சீனா திட்டம்


சீனாவும், அமெரிக்காவும் ஆசிய நாடுகளுக்கான தமிழ் ஒலிபரப்பு சேவை ஒன்றை யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு விரைவில் தொடங்க உள்ளது.

அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட இருக்கும் தமிழ் வானொலிச்சேவை இலங்கை நேயர்களுக்காக 24 மணிநேர எப்.எம் சேவையையும், தமிழ்நாடு, மலேசியா சிங்கப்பூர் மற்றும் இதர ஆசிய நாடுகளில் உள்ள தமிழ் நேயர்களுக்காக எட்டு மணி நேர சிற்றலை ஒலிபரப்பையும் நடத்த உள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை சீனா தன்னுடைய சர்வதேச ஒலிபரப்பான ஏ.எம். மற்றும் எப்.எம் வானொலிகளை இலங்கை, மியன்மார் உட்பட ஏழு நாடுகளுக்கு விரிவுபடுத்த உள்ளதாக சீன சர்வதேச வானொலி நிலைய இயக்குனர் வாங் ஜெங்னி யான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்து சீனாவும், அமெரிக்காவும் இந்த தமிழ் ஒலிப்பரப்பு சேவைகளை ஆரம்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான பூர்வாங்கப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

யாழில் சீனர்கள்  வந்து செல்கின்றமை மிகவும் அதிகரித்துள்ள நிலையில்  சீனா அமெரிக்காவிடமிருந்து இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிவுகள்:ALL POSTS, உலகம், ஊடகம் குறிச்சொற்கள்:,
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக