இல்லம் > ALL POSTS, சிறுகதை > தேய்பிறை (சிறுகதை)

தேய்பிறை (சிறுகதை)


வெண்மதி  அங்கே என்ன செய்யுறாய்?இங்கே வா.உன்னிடம் கொஞ்சம் கதைக்கோணும்.

என்னம்மா!என்ன கதைக்கப்போறீங்கள்?

இல்லை வெண்மதி!உனக்கும் கல்யாண வயசு வந்திட்டு.அதான் உனக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கிறன்

ஏனம்மா இப்ப!இப்ப தான் அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகுது.கொஞ்ச நாள் போகட்டுமே!

இல்லை வெண்மதி!அப்படிச்சொல்லாதே.அப்பா எப்பவும் உண்ட கல்யாணத்தை பற்றியே பேசுவார்.உண்ட கல்யாணத்தை பார்க்க கூட அவருக்கு கொடுத்து வைக்கேல.நல்ல சம்பந்தம் ஒன்று தேடி வந்திருக்கு.அத தவறவிடக்கூடாது.

சரியம்மா!இனி உங்க விருப்பப்படியே நடக்கட்டும்.

(ஒரு வாரத்திற்கு பின்)

வெண்மதி ,எல்லாமே நல்லா நடக்குது.பையன் கனடாவில் இருக்கு.உண்ட படத்தை பையன்ட அம்மாட்ட கொடுத்திட்டன்.இனி எல்லாமே நல்லா நடக்கும்.

சந்தோசமா இருக்கு அம்மா!ஆனா உங்கள பிரிஞ்சு போறதா நினைச்சாத்தான் கவலையா இருக்கு.

(தொலைபேசி சிணுங்குகின்றது.வெண்மதியின்அம்மா சரஸ்வதி தொலைபேசியை தூக்குகின்றார்.மறுமுனையில் அழைப்பை ஏற்படுத்தியவர்  பையனின் அம்மா பாக்கியம்)

வணக்கம் யார் பேசுறது!

நான் தான் பாக்கியம் பேசுறேன்!

“சம்பந்தி சொல்லுங்க சம்பந்தி!” வெண்மதியின் அம்மா ஆவலுடன் கேட்கின்றார்.

அப்படிச்சொல்ல முடியாதுங்க சரஸ்வதி  !

என்னங்க சொல்லுறீங்கள்!

ஆமாம் சரஸ்வதி!என்ட பையனுக்கு உங்கட பொண்ணுண்ட படத்தை அனுப்பினான்.பிடிக்கேலை என்று சொல்லிட்டான்.

ஏன்!என்னாச்சு !

அவன் உங்கட பொண்ணுண்ட படத்தை பார்த்திருக்கிறான்.பொண்ணு கறுப்பா இருக்கிறாவாம்.வேண்டாமாம்.

“கறுப்பு என்றால் என்னங்க!” வெண்மதியின் அம்மா கேட்கின்றார்.

அவன் தன்ட மனைவி வெள்ளையா இருக்கோணுமாம்.அப்பத்தான் நண்பர்களிடம் தன் மனைவி என்று பெருமையா சொல்ல முடியுமாம்.மனைவி கறுப்பா இருந்தால் யாரும் மதிக்க மாட்டாங்களாம்.

(தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகின்றது)

“என்னம்மா ஆச்சு.தொலைபேசியில் கதைத்ததில் இருந்தே எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கிறீங்கள்” வெண்மதி கேட்கின்றாள்.

என்னதையம்மா வெண்மதி சொல்லுறது.அந்தப்பையனுக்கு உன்னைப்பிடிக்கேலையாம்.

“ஏனம்மா! என்ன பிரச்சனை?” வெண்மதி ஆச்சரியத்துடன் கேட்கின்றாள்.

அதவிடம்மா வெண்மதி.எல்லாமே தலைவிதிப்படி தான் நடக்கும்.

“சொல்லுங்கம்மா என்ன பிரச்சனை?” வெண்மதி கேட்கின்றாள்.

நீ கறுப்பா இருக்கிறாயாம்.பொண்ணு வெள்ளையா வேணுமாம்.

“அம்மா,எப்படி அம்மா எனக்கு வெண்மதி என்று பெயர் வைத்தீங்க?வெண்மதி அழகான பெயர் தான்.ஆனால் அது எனக்கு கொஞ்சமும் பொருந்தாத பெயர்”மனதுக்குள் புளுங்கிகொண்டே அவ்விடத்தை விட்டு நகருகின்றாள்.

இரவில் நித்திரையில் மனம் அழுதது.மெதுவாக அவள் துயில் கலையாது யன்னலருகில் நின்று வானத்தை வெறித்துப் பார்த்தாள்.பால் நிலா மூன்றாம் பிறையாய்த் தெரிந்தது.

“திருமணம் என்றால் என்ன?பெண் அழகாக இருப்பதா?அல்லது வெறுமனே அழகை பார்த்தே பொருத்தமானவரை தேர்ந்தெடுப்பதா?  அழகைப் பார்க்கும் ஆடவர் ஏன் தங்களது தோற்றத்தை நினைத்துப் பார்ப்பதில்லை” இவ்வாறு மனதுக்குள் ஓராயிரம் கேள்விகள் கேட்கின்றாள்.

வெளியே நிலவு தேய்ந்தது.ஏய் நிலவே!இங்கே இந்த வெண்மதியும் தான் தேய்ந்து போய்விட்டாள்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சிறுகதை குறிச்சொற்கள்:
 1. 10:16 பிப இல் 2011/03/10

  ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே! கதைகள் மெருகேறிக் கொண்டு வருகின்றன!

  Like

  • 11:44 முப இல் 2011/03/11

   உங்கள் ஊக்குவிப்பே இதற்கு காரணம் நண்பரே.உங்கள் ஊக்குவிப்பு இல்லாவிட்டால் என்னால் இவ்வாறு எழுத முடியாது.
   உங்களுக்கு நன்றிகள் பல.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி எஸ். கே.

   Like

 2. 4:12 முப இல் 2011/03/11

  நினைவுகள் தேய்பிறையானது……

  Like

  • 11:46 முப இல் 2011/03/11

   நடைமுறையில் நடக்கும் யதார்த்தங்களின் நிதர்சனமே இந்த சிறுகதை ஆகும்.

   மிக்க நன்றி சகோதரி.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: