இல்லம் > ALL POSTS, அவலம், உலகம், கிரிக்கெட், விளையாட்டு > வன்னியில் போர் அழிவைப் பார்த்து அதிர்ந்துபோன துடுப்பாட்ட வீரர்கள்

வன்னியில் போர் அழிவைப் பார்த்து அதிர்ந்துபோன துடுப்பாட்ட வீரர்கள்


இலங்கை துடுப்பாட்ட  அணி வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோருடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் இயன் பொத்தம் மற்றும் மைக்கல் வோன் ஆகியோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கில் மாங்குளம் பிரதேசத்துக்குச் சென்றிருந்தனர்.

“பவுண்டேஷன் ஒஃப் குட்னஸ்’ என்ற அமைப்பொன்றின் மூலம் இலங்கை துடுப்பாட்ட  அணி வீரர்கள் ஆரம்பித்துள்ள சமுகப் பணியின் ஒரு கட்டமாக அவர்களின் பயணம் அமைந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சிறார்களிடம் துடுப்பாட்ட  திறமைகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற தொனிப்பொருளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இயன் பொத்தம், வடக்கில் போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்த்துத் தான் அதிர்ந்து போனேன். இவ்வாறான அழிவு ஏற்பட்டிருக்கும் என நான் கனவில் கூட நினைத்துப்பார்க்க வில்லை.இவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.இங்குள்ள வீடுகள் முற்றாக தரைமட்டமாகியிருக்கின்றது. மிகப்பெரிய பரந்த வெளியாக எல்லாம் காட்சியளிக்கின்றது.அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவில்லை. இன்னும் பதினைந்து ஆண்டுகளில் இவர்களை முரளி,சங்கா போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக பார்க்க விரும்புகிறேன்.
வடக்குச் சிறார்களிடமுள்ள திறமைகள் தம்மைக் கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த முப்பது வருடங்களாக தெற்கில் மக்கள் அனுபவித்த வசதிகள் வடக்கு,கிழக்கு மக்கள் அனுபவிக்கவில்லை என  இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். அந்த வசதிகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பது தமது கடமையென்றும் அவர் கூறினார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள இலங்கைக்கு  மேற்குலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முரளிதரன் கூறினார்

இந்த உதவிகள் மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதேனும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Advertisements
  1. 1:09 பிப இல் 2011/03/29

    மீளப் பெற்றுக்கொடுப்பது தமது கடமையென்றும் அவர் கூறினார்…..
    We hope somebody will do something…..

    Like

    • 11:03 முப இல் 2011/03/30

      நம்பிக்கை தான் வாழ்க்கை.பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது நடக்கும் என நம்புவோம்.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: