இல்லம் > ALL POSTS, சினிமா > நடிகை சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு

நடிகை சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு


நடிகை சுஜாதாவின் மறைவு தென்னிந்திய திரைப்படத்துறைக்குப் பேரிழப்பாகும் என்பதை திரைப்படத்துறை ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.58 வயதான சுஜாதா 06-‍‍‍04-௨011 அன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இனி அவரது வாழ்க்கை வரலாறு பற்றிப் பார்ப்போம்.

1950 களில் கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த  மலையாள ஆசிரியர் சுஜாதாவின் தந்தையான மேனன் ஆவார்.இவரது தந்தையான ஆசிரியர் மேனன் அவர்கள் சிறந்த  விலங்கியல் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்பித்தார்.இவர் தனது குடும்பத்தினரோடு தெல்லிப்பளையில் வசித்தார்.
இவரது மகளான நடிகை சுஜாதா 1952ம் ஆண்டு மார்கழி மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் பிறந்தார்.
சுஜாதா தனது 14ம் வயதில் பெற்றோருடன் கேரளாவிற்குத் திரும்பிச் சென்று அங்கே தனது கல்வியைத் தொடர்ந்தார்.

நடிகை சுஜாதாவை ஜோசி பிரகாஷ் என்பவர் தான் முதன் முதலாக மேடை நாடகமான பொலிஸ் ஸ்டேசனில் நடிக்க வைத்தது மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் அறிமுகப்படுத்தினார்.இவரது கணவரின் பெயர் ஜெயகர்.சஜித் என்ற  மகனுக்கும்  திவ்யா என்ற  மகளுக்கும் இவர் தாயாவார்.டூ கல்யான் (1968) என்ற இந்திப்படத்திலும், தபாஷ்வினி என்ற மலையாளப் படத்திலும் இவர் முதலில் தோன்றினாலும் ஏர்ணாம்குளம் ஜங்சன் என்ற மலையாளப்படத்தில் நடித்த பொது தான் கே.பாலசந்தரின் கண்களில் பட்டார்.1974 இல் பிரபல இயக்குனரான கே.பாலசந்தர் எடுத்த அவள் ஒரு தொடர்கதை என்ற படம் தான் சுஜாதாவை சிறந்த ஒரு நடிகையாகத் தமிழ் திரையுலகில் இனம் காட்டியது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் வெளிவந்த இந்தப்படத்தில் சுஜாதாவுடன் கமல்ஹாசன், சிறி பிரியா , விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.1976 இல் வெளிவந்த இளையராஜாவின் பாடல் மூலம் மேலும் இவரது புகழ் ஓங்கியது. மீண்டும் இவர் 1977 இல் கே.பாலசந்தரின் அவர்கள் படத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு அணு என்ற பாத்திரமேற்று நடித்துப் புகழ் பெற்றார்.

அன்றைய பிரபல தமிழ் திரைப்படத்துறை நடிகர்களான சிவாஜி கணேசன் ,ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு கதாநாயகியாக நடித்த பெருமை இவருக்கு உரியது.இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்திப்படங்களிலும்
நடித்திருக்கிறார். அக்னி நாகேஸ்வரராவ்,சோபன் பாபு,சிரஞ்சீவி ,கிருஷ்ணா,மோகன்பாபு, போன்றவர்களோடும் வேற்று மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.

அமரர் நடிகை சுஜாதா அவர்கள் சுமார் 150 படங்கள் நடித் திருப்பதாகத் தெரிய வருகின்றது.இதில் சுமார் 50இற்கு மேற்பட்ட தமிழ்ப் படங்களும் அடங்கும்.இவர் நடித்த கடல் மீன்,அந்தமான் காதலி,விதி,கோசில் காளை, புனர் ஜென்மம்,உன்னை நான் சந்தித்தேன் போன்ற படங்கள் பலராலும் பாராட்டப் பட்டன.
இவர்   நடித்த கடைசி ப்படம் தெலுங்கில் வெளிவந்த நாகர் யுனாவின் படமான ஸ்ரீ ராம ராசு(2006) என்பதாகும்.இவரது கடைசி தமிழ்ப் படம் வரலாறு (2004) ஆகும்.இவர் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி,மற்றும் நந்தி விருது போன்றவற்றைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:
 1. 2:16 முப இல் 2011/04/20

  she born in Tellippalai… father was in Tellippalai ..This is new news for me .Thank you Pirabuwin…Best wishes…

  Like

  • 10:18 முப இல் 2011/04/20

   நன்றி சகோதரி.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 2. 4:57 பிப இல் 2016/01/16

  நல்ல களையான ,அழகான நடிப்புத் திறன் வாழ்ந்த நடிகை இவ்வளவு சிறிய வயதில் மரணமா? அனுதாபங்கள்.

  Liked by 1 person

  • 11:51 முப இல் 2016/01/23

   நீங்கள் சொல்வது முற்றிலும் சரி அம்மா.
   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி சொல்லுகிறேன்😊

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: