இல்லம் > ALL POSTS, இலங்கைத் தமிழர்கள், உலகம் > கனடாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ்ப் பெண் வெற்றி

கனடாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ்ப் பெண் வெற்றி


இலங்கைத் தமிழர்கள் மட்டுமின்றி உலகத் தமிழினமே ராதிகா சிற்சபேசன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண்ணால் பெருமை கொள்கின்றது.

ஆம்,கனடாவில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் ராதிகா சிற்சபேசன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் வெற்றி பெற்றுள்ளார். கனடா பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் எம்.பி. இவர் ஆவார்.

ரொறன்ரோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற தேர்தலில் ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் 17200 வாக்குகளை பெற்று புதிய ஜனநாயகக் கட்சியின் வாக்கு பெற்று மேற்படி தொகுதியில் கணிசமாக அதிகரிக்க வைத்து இத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் 4900 வாக்குக்களைப் மாத்திரமே இந்தக் கட்சி பெற்றிருந்தது.

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த, ராதிகா புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக  ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதியில் (Scarborough Rouge River) போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் கனேடிய பாராளுமன்றத்தில் நுழையும் முதல் தமிழராகவும், முதல் தமிழ் பெண்மணியாகவும் சாதனை படைத்துள்ளதுடன், இலங்கைத் தமிழ் மக்களுக்கும் புலம்பெயர் கனேடிய தமிழ் மக்களுக்கும் உலகத் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம், இத்தொகுதியில் 23 வருடங்களாக பெரும் செல்வாக்கு பெற்றிருந்த லிபரல் கட்சியின் டெரெக் லீ (Dere Lee) ஐ ராதிகா தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் இத்தொகுதியில் புதிய ஜனநாயக கட்சி 4900 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தது.

கனடாவில், இந்த பொதுத் தேர்தலில் மீண்டும் கன்சர்வேடிவ் கட்சியே பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. அதே நேரத்தில் புதிய ஜனநாயகக் கட்சி 100க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில்  பிறந்த ராதிகா சிற்சபைஈசன் தனது ஐந்து வயதில் பெற்றோருடன் அகதிகளாக கனடாவுக்கு சென்றவர். டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் இரண்டு வருடம் தனது இளநிலை பட்டப்படிப்பை (Undergraduate) மேற்கொண்டதுடன் வணிகப்பிரிவில் தனது பட்டப்படிப்பை, Carleton University யில் மேற்கொண்டார்.

2004 ம் ஆண்டிலிருந்து புதிய ஜனநாயக கட்சியின் செயற்பாடுகளுடன் இணைந்த அவர், 2008 தேர்தலின் போது அக்கட்சியின் பிரச்சார செயற்பாட்டாளராகவும் நிர்வாகவியலாளருமாக செயற்பட்டார். தற்சமயம் அவர் டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தில் பணிபுரிந்துவருவதுடன், புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் Scarborough-Rouge River தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

வாழ்த்துக்கள் எம் தமிழ்ப் பெண்ணே.உன்னால் உலகத் தமிழினமே பெருமை கொள்கின்றது.

ராதிகா அவர்களின் காணொளி உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

Advertisements
 1. 11:57 பிப இல் 2011/05/04

  Eniya nal vaalthukal Rathika sitsabesan. We are proud of You(her.).

  Like

  • 2:08 பிப இல் 2011/05/06

   நன்றி சகோதரி.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: