ஈழத்தமிழருக்கு எதிரான சர்ச்சை: டுவிட்டரில் வெளியிட்டார் நடிகர் ஜீவா
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுத்த இளம் வயது நடிகன் நான் தான். இது தெரியாமல் என்னை ஈழத்தமிழருக்கு எதிரானவனாக சிலர் சித்தரித்துள்ளனர்.
ஜீவா தனது டுவிட்டர் இணைய தளத்தில் இதுபற்றி தெரிவித்துள்ளார். “கோ” படத்தினை பிரபலப்படுத்துவதற்காக நடிகர் ஜீவா சேலம், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார்.
அப்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்தின் சார்பில் இரண்டு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதில் ஜீவாவை கையெழுத்திடச் சொன்னதாகவும், அதில் அவர் கையெழுத்திடவில்லை என்றும் சர்ச்சை எழுந்தது. இதை அறிந்து திடுக்கிட்ட ஜீவா, இது குறித்து டுவிட்டர் இணைய தளத்தில் விளக்கமளித்துள்ளார்.
சேலத்தில் உள்ள முகமறியா பத்திரிகையாளர் ஒருவரால் இந்த வீண் சர்ச்சை எழுந்துள்ளது. சரியான தொடர்பு இல்லாமல் போனதால் இதை சர்ச்சையாக்கியுள்ளனர். நடிகர் சங்கம் சார்பில் இதே ஈழத் தமிழர்களுக்காக கையெழுத்திட்டுள்ளேன். இதை யார் அறிவார். ஆதலால் இதை சர்ச்சையாக்க வேண்டாம்.
“ராமேஸ்வரம்”, “கற்றது தமிழ்” ஆகிய படங்களில் நடித்தற்கு கதை மட்டும் காரணமல்ல, தமிழன் என்ற உணர்வு என்னுள் மேலோங்கி இருந்தது தான் முக்கிய காரணம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுத்த இளம் வயது நடிகன் நான் தான். நான் என்றுமே தமிழர் பக்கம் தான். முகமறியா அந்த பத்திரிகையாளர் நல்ல ஒரு மருத்துவரை பார்க்க வேண்டுகிறேன். அவர் நலமடையவும் வேண்டிக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
jeeva is great.he always support srilankan tamils.
LikeLike
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி தருண்.
LikeLike
இலங்கைத் தமிழர்களை யார் எதிர்த்தாலும் அவர்களை நாங்கள் புறக்கணிப்போம்.
உண்மையுடன் தமிழ்நாட்டுத் தமிழன்.
LikeLike
உங்கள் அன்பிற்கு நன்றி.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி தமிழ்நாட்டுத் தமிழன்.
LikeLike
உங்கள் வலைத்தளம் சூப்பர்.
இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் என்றும் பிரார்த்தனை செய்கிறோம்.
LikeLike
உங்கள் அன்பிற்கு நன்றி.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி ஜானகி.
LikeLike
இந்தப் புதினம் தெரியாது.. உங்கள் மூலம் அறிந்தது…மிக்க நன்றி உங்கள் இணைப்பிற்கு…..
LikeLike
நன்றி சகோதரி.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி கோவை கவி.
LikeLike