இல்லம் > ALL POSTS, சினிமா > விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்


நடிகர் விஜய் தமது பிறந்தநாளை முன்னிட்டு, எழும்பூர் மருத்துவ மனையில் ஜூன் 22இல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார்.

நடிகர் விஜய் தனது பிறந்த நாளை ஜூன் 22இல் கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டார். எழும்பூர் அரசு தாய்சேய் மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகளுக்கு மனைவி சங்கீதாவுடன் நேரில் சென்று தங்கமோதிரம் அணிவித்தார். பரிசு பொருட்களும் வழங்கினார். இந்த மருத்துவமனையில் தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். மருத்துவர்கள், செவிலியர்கள்,ஊழியர்கள் விஜய்யை வரவேற்றனர். அவரை காண மருத்துவமனை முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள். கோடம்பாக்கத்தில் உள்ள தாய் சேய் நல அரசு மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகளுக்கும் மோதிரம் அணிவித்தார்.

தமிழகம் முழுவதும் 500 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது. சாலிகிராமம் ஷோபா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார். ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்தினர். நடிகர்கள் ஜீவா, தாமு, டைரக்டர்கள் ஷங்கர், ஏ.வெங்கடேஷ், பேரரசு, ராஜா, தயாரிப்பாளர்கள் ஆஸ்கார் ரவிச்சந்திரன், கலைப்புலி தாணு, ஆர்.பி. சவுத்ரி மோகன், நடராஜன் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

பின்னர் ஏழைகளுக்கு புடவை, வேட்டிகளை விஜய் வழங்கினார். மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினார். ரசிகர்கள் 500 பேர் ரத்த தானம் செய்தனர். சாலிகிராமம் பாலலோக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமை விஜய் துவக்கி வைத்தார். மருத்துவர் மோகன் தலைமையில் இந்த முகாம் நடந்தது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் கண்தானம் செய்தனர்.

சின்மயா நகரில் உள்ள குழந்தை ஏசு கோவிலில் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு விஜய் இலவச மதிய உணவு வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், பாஸ்கர், ரவிராஜா, மக்கள் தொடர்பாளர் பி.டி. செல்வகுமார், ஆகியோர் செய்து இருந்தனர்.

திருவான்மியூரில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் இ.சி.ஆர்.சரவணன் தலைமையில் நடந்த ரத்ததான முகாமை விஜய் துவங்கி வைத்தார். 160 பேர் கண் தானமும் செய்தனர். நீலாங் கரை ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் எம்.கே.முனு சாமி, உத்தண்டி அ.தி.மு.க. பிரமுகர் எம்.சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

நன்றி-இணையம்

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:,
 1. 1:03 முப இல் 2011/06/28

  பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி இங்கு வாசித்து அறிந்து கொண்டேன் மிக்க நன்றி பிரபு.

  Like

  • 10:05 முப இல் 2011/06/28

   மிக்க மகிழ்ச்சி சகோதரி.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 2. 3:58 பிப இல் 2011/06/28

  சமூகசேவையாகும் பிறந்த நாள்.
  நல்ல பதிவு.

  Like

  • 10:51 முப இல் 2011/06/30

   உங்கள் வருகையால் அகமகிழ்ந்தேன் வைத்தியரே!
   நன்றிகள் பல.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கதிர்முருகா.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: