இல்லம் > ALL POSTS, சினிமா > நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம்

நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம்


நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம் கோவையில் இன்று காலை கோலாகமாக நடந்து முடிந்தது. இதில் திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர் கார்த்திக்கும் ஈரோடு அருகே உள்ள கிலாம்பாடியை சேர்ந்த சின்னசாமி – ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமண நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் இன்று காலை நடந்தது.

மணமகள் ரஞ்சனி கழுத்தில் கார்த்தி தாலி கட்டினார். அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் உற்சாகத்துடன் வாழ்த்து கோஷமிட்டு மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

இதில் ஜோதிகா, நக்மா, அவரது தங்கை ரோஷினி, நடிகர் சிபி, நடிகர் ராஜேஷ், டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், சுராஜ், இசையமைப்பாளர்கள் கணேஷ், ஜி.வி.பிரகாஷ், மனிதநேய கல்வி அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, பேராசிரியர் சாலமன் பாப்பையா, நடிகர் சிவாஜியின் நண்பர் சேத்துமடை முத்துமாணிக்கம், கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

கார்த்தி – ரஞ்சனி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 7ம்தேதி நடைபெறுகிறது. இதில் திரையுலக பிரமுகர்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்த உள்ளனர். புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் இங்கே வாழ்த்தை பகிர்ந்து கொள்ளலாம்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:
 1. 12:44 முப இல் 2011/07/04

  good news I like karthic as surya. Best wishes Pirabu.

  Like

  • 11:18 முப இல் 2011/07/04

   இவர்களது இல்வாழ்வு சிறப்பாக அமைய இறைவன் அருட் கடாட்சம் கிடைக்கட்டும்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: