இல்லம் > ALL POSTS, உலகம் > அமெரிக்க அதிபர் ஒபாமா சுட்டுக்கொலை

அமெரிக்க அதிபர் ஒபாமா சுட்டுக்கொலை


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுட்டுக் கொலைசெய்யப்பட்டார் என அமெரிக்க செய்திச் சேவை தெரிவித்ததை அடுத்து பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. இச் செய்தி உலகம் பூராகவும் பரவி பலரை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பாக்ஸ் செய்திச்சேவை(FOX NEWS) மிகப் பிரபல்யமான ஒரு செய்தி ஊடகமாகும். அது பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதில் பேர்போன ஒரு ஊடகம் என்பது யாவரும் அறிந்த விடையம்.

இன்று மதியம் அந்த ஊடகத்துக்குச் சொந்தமான ருவீட்டர் கணக்கை சில கணனித் திருடர்கள் உடைத்து, அதனூடாக ஓபாமா சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இச் செய்தி வெளியாகிச் சில நிமிடங்களிலேயே அது பல மில்லியன் வாசகர்களைச் சென்றடைந்து விட்டது. பி.பி.சி, ரொய்டர்ஸ், மற்றும் அல்ஜசீரா உட்பட பல செய்திச் சேவைகள் இச் செய்தி தொடர்பாகக் குழம்பிப்போனார்கள். அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு பல நூறு தொலைபேசி அழைப்புகள் செல்ல ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து அவர் அதிபர் பராக் ஒபாமாவுடன் உடனடியாக தொடர்புகொண்டு நிலையை விளக்கியுள்ளார்.

பின்னர் இச் செய்தி எங்கிருந்து பரவுகிறது என அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எவ்.பி.ஐ விசாரணைகளை முடிக்கிவிட்டது. இதன் மூலம் ருவீட்டர் கணக்கு உடைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனை இஸ்லாமிய பயங்கரவாதிகள் சீன வல்லுனர்களுக்கு காசைக்கொடுத்து செய்திருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது. இதனை அவ்வளவு சுலபமாக விட்டுவிடமுடியாது என எப்.பி.ஐ தெரிவித்துள்ளதோடு, சூத்திரதாரிகளைக் கண்டறியும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் அல் கைடா தலைவர் ஓசாமா பின்லேடன் சுட்டுக்கொலைசெய்யப்பட்ட பின்னர் அதிபர் ஓபாமாவின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்நேரமும் தாக்கலாம் என்ற அச்ச சூழ் நிலை காணப்படுகிறது.

இந் நிலையில் அமெரிக்க அதிபர் கொல்லப்பட்டார் என்ற செய்தியை வேண்டுமெண்றே கிளப்பிவிட்டார்களா, இல்லை இது ஒரு எச்சரிக்கையா என்று தெரியாமல் அமெரிக்க உளவுப் படையினர் மண்டையை பிய்த்துக்கொண்டு உள்ளனராம் !

முக்கிய குறிப்பு:
இதை யாரும் நம்ப வேண்டாம்.இது ஒரு திட்டமிட்ட விசமப் பிரசாரம்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, உலகம் குறிச்சொற்கள்:
 1. 11:18 முப இல் 2011/07/08

  என்ன சொல்வது. பழிவாங்கும் முறை மிகக் குரூரமாக முன்னேறுகிறது. இது முடியாத போராட்டம்.

  Like

  • 10:21 முப இல் 2011/07/09

   இவ்வாறான செயல்கள் அருவருக்கத்தக்கவை.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: