இல்லம் > ALL POSTS, ஊடகம் > இலங்கைத் தமிழ் அழகான தமிழ் – நடிகர் விஜய்

இலங்கைத் தமிழ் அழகான தமிழ் – நடிகர் விஜய்


இலங்கைத் தமிழ் மிகவும் அழகான தமிழ் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.இந்தியத் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய பேட்டியின் போது இலங்கைத்  தமிழர்கள் தொடர்பாக கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.அப்போது இந்தியத் தமிழர்கள் உட்பட  நான்கு  இலங்கைத் தமிழர்களும் கலந்து கொண்டனர். இலங்கைத் தமிழர்கள் விஜய்யுடன் கேள்விகளைக்  கேட்டு உரையாடினர்.அப்போதே விஜய் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த விஜய் ,நீங்கள்(இலங்கைத் தமிழர்கள்) கதைப்பதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.இலங்கைத் தமிழ் மிகவும் அழகான தமிழ்.அவ்வளவு இனிமை.நானும் இந்த அழகான தமிழை என் மனைவி மூலம் ஒவ்வொரு நாளும் கேட்டு ரசிக்கின்றேன்.
இவ்வாறு விஜய் தெரிவித்தார்.

குறிப்பு: விஜய் சொல்லித்தான் இலங்கைத் தமிழின் அழகு பற்றித்தெரிய வேண்டுமா என்று  படிக்கும் நீங்கள் கேட்கலாம்.இலங்கைத் தமிழின் அழகு உலகம் அறிந்தது.அதிலும் யாழ்ப்பாணத் தமிழின் அழகு அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் முதற் கொண்டு பில் கேட்ஸ் வரை அனைவருக்கும் தெரியும்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, ஊடகம் குறிச்சொற்கள்:
  1. 2:02 பிப இல் 2011/07/11

    தமிழ்!…மிக இனிமை.. அதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அது அப்படியே உருவாகியுள்ளது. ஊடகங்களில் செய்தி வாசிப்பில் கூட யாழ்ப்பாணத் தமிழ் தனித் தன்மை வகிக்கிறது. கண்ட ஊடகங்களைப் பார்த்து உச்சரிப்புகளைச் சில தமிழர் கொல்லுகிறார்கள். இவர்கள் திருமதி ஆனந்தராணி பாலேந்திரா, திரு விமல் சொக்கநாதன் ஆகியோரைப் பார்த்துத் திருந்த வேண்டும். நான் இங்கு குறிப்பிடுவது தமிழ் – செய்தி வாசிப்பை மட்டுமே. நன்றி பிரபு இந்த இடுகைக்கு. நல் வாழ்த்துகள். (நீர் ஒரு இடுகையிட நான் ஏதோ சொல்கிறேன். ஆனால் சொல்ல வேண்டும் சொல்கிறேன்).

    Like

    • 10:11 முப இல் 2011/07/12

      நீங்கள் கூறுவது நிதர்சனம் சகோதரி.
      எங்கள் தமிழின் அழகு சிலருக்குத் தெரிவதில்லை.தெரிந்தாலும் தாங்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல தமிழ் உச்சரிப்புக்களை கொல்லுகிறார்கள்.இவர்களை தமிழ் உலகம் என்றும் ஏற்றுக் கொள்ளாது என்பது மட்டும் நூறு சதவீத உண்மை.
      நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: