இல்லம் > ALL POSTS, அறிவியல் > கண்களை பாதுகாப்பதற்கான சில வழிமுறைகள்

கண்களை பாதுகாப்பதற்கான சில வழிமுறைகள்


கண்கள் மிகவும் மென்மையானவை. கண்களை சுற்றி 12 தசைகள் இயங்குகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண்நோய் வருகிறது.

இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது.

ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். தொடர்ந்து தொலைக்காட்சி, சினிமா பார்த்தால் கண்கள் சோர்வடையும். கண்களில் வலி இருக்கும். இமைகள் கனமாக இருக்கும். தலைவலியும் வரும்.

மேலும் தொடர்ந்து படிக்கும் போது கண் மங்கலாக தோன்றும். நீண்ட நேரம் இரவில் விழித்து தொலைக்காட்சி பார்ப்பதாலும் கண் பாதிப்பு ஏற்படும். இதனால் கண்ணின் கருவிழி மற்றும் ஜவ்வு, கண் இமைகளின் உட்பகுதி விளிம்பு ஆகியவற்றில் சிலநோய் அறிகுறிகள் தென்படும்.

கண் சிவத்தல், கண்ணில் தூசு விழுந்தது போன்ற உறுத்தல், இமைகள் வீங்குதல், கண் கூசுதல், கண்களில் நீர் வடிதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு கண்கள் எப்போதுமே சிவப்பாக காணப்படும். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பொதுவாக ரத்தக் குழாய்கள் விரிவடையும்.

அதே போன்று கண்ணின் வெண்விழி ஜவ்விலும் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சிவப்பாக தோன்றும். ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைந்தால் கண்கள் வெண்மை நிறத்துக்கு மாறிவிடும்.

மதுப்பழக்கம் இல்லாத சிலருக்கும் ரத்தக்குழாய் தடிமனால் கண்கள் சிவப்பாக தோன்றலாம். இதனை குளிர்க்கண்ணாடி அணிந்து சமாளிக்கலாம். கண் சிவந்து வலியும் இருந்தால் கண்ணில் புண் அல்லது கண் நீர் அழுத்தம் காரணமாக இருக்கலாம். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

வெண்விழியில் உள்ள ஜவ்வில் வைரஸ், பாக்டீரியா தொற்று, அலர்ஜி மற்றும் கண்கள் உலர்ந்து போதல், ரசாயன பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, தூசு விழுதல் ஆகிய காரணங்களாலும் கண்கள் வீங்கி சிவப்பாக மாற வாய்ப்புள்ளது.

எனவே கண்ணில் சிறிய பிரச்னை இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். சுயமருத்துவம் செய்வது தவறாகும். இருசக்கர வாகனத்தில் கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணணி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல், கண்நோய் மற்றும் டென்ஷன் காரணமாகவும் கண்ணில் நீர்வடியும்.

இதில் இரண்டு வகை உண்டு. கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படுவது ஒருவகை. இன்னொரு காரணம் எபிபோரா. கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் கண்ணில் நீர்வடியும்.

இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். உடனடி சிகிச்சையின் மூலம் பார்வை இழத்தல் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கண் மருத்துவ நிபுணர்கள்.

பாதுகாப்பு முறை: குறிப்பிட்ட இடைவெளியில் கண் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் பிரச்னைகளை துவக்கத்தில் கண்டறிந்து சரி செய்யலாம். நாள்பட்ட சர்க்கரை மற்றும் மிகை ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் நோயை கட்டுக்குள் வைப்பது அவசியம்.

கண்ணில் ஏற்படும் நோய் தொற்று அறிகுறிகளை உடனே அறிவதும் முக்கியம். திடீர் பார்வையிழப்பு, தெளிவற்ற பார்வை, கண்களில் ஒளி வீசுதல், கறுப்புப் புள்ளிகளின் தோற்றம் போன்றவை கண் அழுத்த நோய் அல்லது மூளை பாதிப்பின் விளைவாக இருக்க வாய்ப்புள்ளது.

சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி அணியலாம். வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

சரியான கண்ணாடியை அணிவதன் மூலம் பார்வை திறனை சரி செய்து கொள்ளலாம். குறைந்த வெளிச்சத்தில் படிப்பதை தவிர்க்கவும். கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது. கண்களை மூடிய நிலையில் 10 நிமிடத்துக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம்.

சிவந்த கண்கள் பிரச்னை உள்ளவர்கள் வெந்நீரில் துணியை நனைத்து பிழிந்து ஒத்தடம் கொடுக்கலாம். கண் நோய் ஏற்பட்டால் கைகளை அடிக்கடி கழுவவும். வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உபயோகிக்கவும்.

கண் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தலையணை உறையை தினமும் மாற்றவும். இது போன்ற நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கண் நோயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:
 1. 1:41 பிப இல் 2011/07/31

  I saw this . i will read it in the evening.. Best of luck.

  Like

 2. 10:31 முப இல் 2011/08/01

  good aakkam.. Thank you.

  Like

  • 5:46 பிப இல் 2011/08/08

   மிக்க நன்றி சகோதரி.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: