இல்லம் > ALL POSTS > யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில்

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில்


நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளதூ. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது.

இக்கோயில் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.யாழ்ப்பாணம் வருபவர்கள்  இந்தக் கோயிலை தரிசித்த பின்பே எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்வார்கள்.இலங்கையில் நடந்த கொடிய போரில் யாழ்ப்பாணம் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்ட போதும் இந்தக் கோயில் சேதம் அடையவில்லை என்பது இதன் சிறப்பு.

 

திருவிழா காலங்களில் மேன்மை கொள் சைவ நீதி என்பதற்கு சாட்சியாக நல்லூர் காட்சியளிக்கும். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் மஹோற்சவம் ஆரம்பித்து விட்டால் அதன் உற்சாகம் யாழ்ப்பாணத்தில் மாத்திர மல்ல உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. எந்த மயமும் கந்தமயமாகவே நல்லூர் கந்தசுவாமி கோயிலின் சுற்றாடல் காட்சியளிக்கிறது. இருபத்தைந்து தினங்களும் தினம்தோறும் விரதம் அனுட்டித்து திருக் கோயிலுக்குச் சென்று வலம் வந்து திருவிழாவில் பங்குபற்றி முருகன் அருள் பெற்று வீடு திரும்பும் பக்தர்களின் தொகை அளவிட முடியாது.

 

 

நல்லூர் கந்தசாமி கோவிலில் திருவிழா என்றால், யாழ்ப்பாணத்தில்  மட்டுமல்ல, இலங்கையில் உள்ள முருக அடியார்கள் அனைவரது உள்ளங்களிலும் உற்சாகம்தான். 

 
இந்தக் கோயில் தொடர்பான மேலும் பல தகவல்களை இன்னொரு பதிவில்  விரிவாக தருகிறேன்.
Advertisements
பிரிவுகள்:ALL POSTS குறிச்சொற்கள்:
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: