உலகைக் கலக்கும் ஒபாமா மகளின் ஒளிப்படம்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தலை மகள் மலியாவின் ஒளிப்படம் ஒன்று இணையத்தளம் வழியாக பரவி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமது மகள்கள் குறித்து மிகவும் கட்டுப்பாட்டுடன் உள்ளார் ஒபாமா. அதுமட்டுமன்றி அவர்கள் குறித்த செய்திகள் எதுவும் தவறாக வந்து விடக் கூடாது என்பதில் தாயார் மிஷல் மிகக் கவனமாக உள்ளார்.
ஆனால் அதையும் மீறி 16 வயதான தலை மகள் மலியா ஒபாமா கூந்தலை சரி செய்தபடி காட்சியளிக்கும் ஒளிப்படம் ஒன்று INSTAGRAM மூலமாக வெளியாகியுள்ளது. மலியாவின் படங்கள் ஏற்கனவே இணையத்தில் உள்ள போதிலும் குறித்த படம் அவரது அறைக்குள் எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
படத்தில் மிகவும் சாதாரணமான முறையில் மலியா அணிந்துள்ள சட்டையில் புரூக்லினை தளமாகக் கொண்ட இசைக் குழுவொன்றின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் INSTAGRAM கணக்கின் ஊடாகவே படம் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.இருப்பினும் இந்தப் படம் யாரால், எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எப்படி வெளியானது என்றும் தெரியவில்லை. இந்த ஒளிப்படம் குறித்து இதுவரை வெள்ளை மாளிகை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வயது பேத்திகளோ,பெண்களோ ஞாபகம் வருகிறது. விசாரமெதுவுமில்லாத ஸந்தோஷத்தின் பிரதிபலிப்பு முகத்தில். அன்புடன்
LikeLiked by 1 person
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அம்மா.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி அம்மா.
LikeLike