நான் பார்த்த சென்னை (காட்சி 1)
சென்னை வானூர்தி நிலையத்தில்
Srilankan Airlines வானூர்தி மூலம் சென்னை வானூர்தி நிலையத்தை வந்தடைந்தேன்.சிங்காரச் சென்னை என்று திரைப்படங்களில் அறியப்பட்ட எங்கள் தமிழ் உறவுகள் வாழும் அழகான சென்னைக்கு வந்துவிட்டேன் என்ற திருப்தி. குடிவரவு, குடியகல்வு பரிசோதகர் எனது கடவுச் சீட்டை பார்த்து எதற்காக வந்தீர்கள்,எங்கு தங்கப் போகின்றீர்கள் போன்ற விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார்.அனைத்தையும் சரி பார்த்த பின்பு வெளியே செல்வதற்கான அனுமதியைத் தந்தார்.
வெளியில் வந்ததும் நூற்றுக் கணக்கான வாடகை வண்டிகள் பயணிகளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தன.நான் ஏற்கனவே வண்டியை பதிவு செய்திருந்ததனால் எனக்கான வண்டி வந்திருந்தது.அலைபேசி மூலம் என்னை உறுதிப்படுத்திவிட்டு வண்டியில் பயணித்தேன்.
போகும் போதே சென்னையின் நிஜ வடிவத்தை தரிசித்துக் கொண்டு சென்றேன். வீதியெங்கும் பிரமாண்டமான விளம்பரங்கள், மதில்கள் அனைத்திலும் அரசியல் தலைவர்களின் புகழ் மாலை விளம்பரங்கள் வர்ணத் தீட்டப் பட்டு இருந்தன.குறிப்பாக “வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம்” போன்றன.இவை நகரின் அழகை சற்று குறைத்து விட்டனவோ என்ற அபிப்பிராயம் என் மனதில் தோன்றியது.வீதியில் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவைகளாகவே இருந்தன.
நான் எங்கே தங்கப் போகின்றேன் என்பதை இன்னும் கூறவில்லையே.ம்.. கூறுகின்றேன்.வளசரவாக்கம்,இந்த இடத்தை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறேன். (மீனம்பாக்கம்) விமான நிலையத்தில் இருந்து வளசரவாக்கம் 31 நிமிடப் பயணம்.10.9 km. அப்பாடா! நேரம் போனதே தெரியவில்லை .வீட்டை அடைந்து விட்டேன்.
வளசரவாக்கம்
வீடு வளசரவாக்கத்தில் வசிக்கும் யாழ்ப்பாணத் தமிழர் வாடகைக்கு பெற்றுத் தந்தார்.
வீடு அமைந்துள்ள இடம்
கிருஷ்ணா நகர் (வேலன் நகருக்கு அருகாமையில்)
வளசரவாக்கம்
சென்னை .
ஒரு நாள் வாடகை 3500/= இந்திய ரூபா.நான் ஒரு மாதம் தங்கப் போகின்றேன்.4 அறைகள் ,3 குளியலறை, ஒரு விறாந்தை உள்ளடங்கிய ஒரு மேற் தளத்தை கொண்ட வீடு . இங்கு தான் உறவினர்களும் தங்கப் போகின்றார்கள்.தனி வீடு எடுத்ததில் திருப்தியுடன் கூடிய மகிழ்ச்சி.
அன்று இரவே உறவினர்களும் வந்து விட்டார்கள். அப்பாடா! .எல்லோரும் வந்தாச்சு.இனி சென்னையை சுற்றிப் பார்க்க வேண்டியது தான்.
காட்சி 2 அடுத்த பதிவில் ….
நான் பார்த்த சென்னை அறிமுகத்தை பார்க்க.
திரைப்படம் போல நான் பார்த்த சென்னை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது.
அடுத்த பதிவை படிக்க நான் இப்பொழுதே தயாராக இருக்கிறன்.
நன்றி பிரபு.
LikeLike
நன்றி கூறுகின்றேன் மலாய் தமிழன்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி மலாய் தமிழன்.
LikeLike
வாசகர்களை சென்னைக்கு செலவில்லாமல் அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.ரொம்பவே நல்லா எழுதுறீங்கள்.
நன்றி தல.
LikeLike
நன்றி கூறுகின்றேன் வருண்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி வருண்.
LikeLike
ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது! தொடர்ந்து வருகிறேன் 🙂
LikeLike
அப்படியா! மேடம்.மிகவும் நன்றி.ஏதாவது குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.தொடர்ந்து வருகின்றேன் என்று கூறியதற்கு மிக்க நன்றி மேடம்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி மஹா மேடம்.
LikeLiked by 1 person
கலக்குறீங்க பாஸ்.
LikeLike
நன்றி கூறுகின்றேன் தமிழ் மகன்.இந்த உலகத்தில் எல்லோரும் பாஸ் தான்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி தமிழ் மகன்.
LikeLike
நீ கலக்கு தல!
LikeLike
நன்றி கூறுகின்றேன் குமரன்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி குமரன்.
LikeLike
சென்னைக்கு செலவில்லாமல்
LikeLiked by 1 person
நன்றி சகோதரி.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி கோவை கவி.
LikeLike