இல்லம் > ALL POSTS, உலகம் > நான் பார்த்த சென்னை (காட்சி 2)

நான் பார்த்த சென்னை (காட்சி 2)


முதலில் எங்கு செல்வது என்பதில் குழப்பம்.சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு அடுத்து என்ன செய்வது என்று தீர்மானம் எடுத்தோம்.எங்கே சாப்பிடுவது? அது அடுத்த குழப்பம். வீட்டில் சமைப்பதா? வெளியில் சாப்பிடுவதா? வீட்டில் சமைக்க நேரம் எல்லாம் சரிப்பட்டு வராது.ஒரு வெளி நாட்டுக்கு வந்திருக்கின்றோம்.இங்கே உள்ள சாப்பாடுகளை ருசி பார்க்க வேண்டாமா?அதுவும் சரிதான் என்று எல்லோரும் ஒருமித்து தலை ஆட்டினார்கள்.

புதிய ஆந்திரா உணவகம்

unavagamவளசரவாக்கத்தில் அதிகமான உணவகங்கள் இருக்கின்றன.புதிய ஆந்திரா உணவகத்தில் நல்ல ருசியான, தரமான உணவுகள் கிடைக்கும் என்று அயல் வீட்டுக்காரர் சொன்னார். என்னங்கடா நடக்குது !அதுக்குள்ளயா பக்கத்துக்கு வீட்டுக்காரர சிநேகிதம் பிடிப்பீர்கள் என்று நீங்கள் முனுமுனுப்பது நல்லாக் கேட்குது.அவர் எங்களுக்கு வீடு எடுத்துத் தந்தவரின் நண்பர்.அதனால் பழகுவதில் சிக்கல் ஏற்படவில்லை.

food

நான் இருக்கும் வீட்டிலிருந்து 1.5 KM தூரத்தில் அமைந்துள்ளது ஆந்திரா உணவகம்.ஆந்திரா உணவகத்திற்கு முன்னால் பிரதான வீதி.எந்நேரமும் வாகனப் போக்குவரத்து இடம்பெறும் நெடிய வீதி.எங்கும் வீதிச் சமிக்சைகளை காணவில்லை.அந்த வீதியைக் கடப்பதற்கு பட்ட பாடு இருக்கின்றதே! அப்பப்பா!முடியலை.இட்லி சாப்பிடுவதாக உத்தேசம்.சாப்பாடு சொல்லி வேலை இல்லை.அவ்வளவு ருசி ஒரு குறையைத் தவிர.

சாப்பாடு அந்தமாதிரி.ஆனால் எங்களுக்கு திருப்தி கொஞ்சம் குறைவு.காரணம், ஈழத் தமிழர்கள் காரம் மிக அதிகமாக உணவில் எடுத்துக் கொள்வார்கள்.இந்தியத் தமிழர்கள் அதற்கு எதிர்மாறானவர்கள்.அதனால் ஒரு நன்மை அவர்களுக்கு இருக்கிறது.இந்தியாவில் தெலுங்கு மக்கள் அதிக காரம் எடுப்பார்களாம்.அதனால் அவர்களுக்கு தமிழ் நாட்டு மக்களை விட வயிற்றுப் புண் அதிகம் ஏற்படுகின்றதாம்.இதை எங்கள் வீட்டுக்கு   அருகில் உள்ள கடைக்காரர் சொன்னார்.

ஆச்சி மசாலா

Powder

என்ன பண்ணுவது சாப்பாட்டில் காரம் இல்லை.வீட்டில் சமைப்போம் என்று அடுத்த நாள் திட்டம் போட்டோம்.மிளகாய்த்தூள் எதுவும் நாங்கள் கொண்டுவரவில்லை.கடையில் விசாரித்த போது ஆச்சி மசாலா கிடைத்தது.கோழி,ஆடு,மீன் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கிடைக்கின்றது.சக்தி மசாலா என்ற பெயரில் இன்னொரு மசாலாத் தூளும் கிடைக்கின்றது.

food

வீட்டிற்கு முன் வந்த மீன் காரரிடம் இறாலும் மீனும் வாங்கினோம்.நகர் பகுதியில் மீன் காரர் வீடு தேடி வந்தது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.மிளகாய் தூளுக்கு பதில் ஆச்சி மசாலாவை பயன்படுத்தினோம்.நாங்கள் எதிர்பார்த்த காரம் இல்லை . சோற்றுடன் சீனியைப் போட்டுச் சாப்பிடுவது போல் இருந்தது.சீனியை தமிழ்நாட்டில் சர்க்கரை என்று அழைக்கிறார்கள். சாப்பாடு சொதப்பியது.காரணம்,காரம் மட்டுமே.தமிழ் நாட்டு மக்கள் இந்த உணவை சாப்பிட்டிருந்தால் இந்த உணவை மணியாக இருக்கு என்று சொல்லியிருப்பார்கள்.மணியாக என்றால் அருமையாக இருக்கின்றது என்று அர்த்தம்.இலங்கையில் உணவு சுவையாக இருந்தால் மணியாக இருக்கு என்று சொல்லுவார்கள்.

வளசரவாக்கத்தில் உள்ள பிரபல்யமான உணவகங்கள்
IFC Indram Food Court
29/45, Sridevikuppam Main Road, Valasaravakkam, Chennai.
Gama Gamaa
Shop No.156, Arcot Rd, Valasaravakkam, Chennai.
Suryan AC Restaurant
State Highway 113, Thandavamoorthy Nagar, Valasaravakkam, Chennai.
Pandian Chettinadu Restaurant
163, Arcot Road, Venkateswara Nagar, Valasaravakkam, Chennai.
Friends Park
Shop No.1, Arcot Rd, Valasaravakkam, Chennai.
New Andhra Meals Hotel
Indira Nagar, Valasaravakkam, Chennai.
நான் பார்த்த சென்னை (காட்சி 3) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

 

நான் பார்த்த சென்னை அறிமுகத்தை பார்க்க.

நான் பார்த்த சென்னை

நான் பார்த்த சென்னை (காட்சி 1) பார்க்க.

நான் பார்த்த சென்னை (காட்சி 1)

——————————————————————————————————-

logo_1378541_web

PRABUWIN MEDIA பெருமையுடன் வழங்கும் குறும்படம் மிக விரைவில்..
பிரிவுகள்:ALL POSTS, உலகம் குறிச்சொற்கள்:
 1. வருண்
  9:06 பிப இல் 2015/01/26

  நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பிரபு.

  Like

  • 11:01 முப இல் 2015/01/29

   நன்றி கூறுகின்றேன் வருண்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி வருண்.

   Like

 2. 3:41 பிப இல் 2015/01/27

  நீங்களும் ஆந்திரகாரர்கள் போல உணவில் காரம் அதிகமாக சேர்த்து சாப்பிடுவீர்களா!! தமிழ்நாட்டில் காரம் அதிகமாகவும் இருக்காது , குறைவாகவும் இருக்காது. காரம் அதிகமாக வேண்டுமெனில் நீங்கள் தனி மிளகாய் பொடி உபயோகித்து இருந்திருக்கணும். இந்த ஆச்சி , சக்தி மசாலக்களே தனி தனியாக , மிளகாய் பொடி , தனியா பொடி , சீர்க பொடி , மிளகு பொடி , மஞ்சள் தூள் என்று விற்பார்கள். தனி தனியாக வாங்கி உபயோகிக்கும் போது காரம் உங்களுக்கு ஏற்றாற் போல் போட்டு சமைத்து கொள்ளலாம்! ஆக, வளசரவாக்கம் ஹோட்டல்களை எல்லாம் ஒரு ரவுண்டு அடித்து விட்டீர்கள் என்று சொல்லுங்கள் 🙂

  Liked by 1 person

  • 11:00 முப இல் 2015/01/29

   “நீங்களும் ஆந்திரகாரர்கள் போல உணவில் காரம் அதிகமாக சேர்த்து சாப்பிடுவீர்களா!! “

   ஓம் மேடம்.காரம் இல்லாவிட்டால் உணவை எட்டியும் பார்க்க மாட்டம்.எங்கள் ஊரில் காரத்தை உறைப்பு என்றும் சொல்லுவார்கள்.

   “காரம் அதிகமாக வேண்டுமெனில் நீங்கள் தனி மிளகாய் பொடி உபயோகித்து இருந்திருக்கணும்”

   இது எனக்குத் தெரியாமப் போச்சே!

   “வளசரவாக்கம் ஹோட்டல்களை எல்லாம் ஒரு ரவுண்டு அடித்து விட்டீர்கள் என்று சொல்லுங்கள்”

   ஓம் மேடம்.அருமையான உபசரிப்புடன் கூடிய உணவகங்கள்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி மஹா மேடம்.

   Liked by 1 person

 3. Ravi
  2:14 பிப இல் 2015/01/28

  அடுத்த பதிவை விரைவில் எழுதுங்கள்.நன்றி பிரபு.

  Like

  • 11:03 முப இல் 2015/01/29

   நன்றி கூறுகின்றேன் ரவி.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி ரவி.

   Like

 4. குமார்
  8:31 பிப இல் 2015/01/28

  விரிவாக எழுதியதற்கு நன்றி தல.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  Like

  • 11:01 முப இல் 2015/01/29

   நன்றி கூறுகின்றேன் குமார்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி குமார்.

   Like

 5. 3:04 முப இல் 2015/04/26

  சென்னைக்கு செலவில்லாமல் விரிவாக

  Liked by 1 person

  • 1:37 பிப இல் 2015/04/28

   நன்றி சகோதரி.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: