இல்லம் > ALL POSTS > பிறந்த குழந்தைகள் பற்றிய வியக்க வைக்கும் விடயங்கள்

பிறந்த குழந்தைகள் பற்றிய வியக்க வைக்கும் விடயங்கள்


New Born Baby

ஒரு குழந்தையின் பிறப்பு என்பது தாயின் மறுபிறவி என கூறுவோம்.ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தையே இல்லை.குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு தெரிந்திருப்பது அவசியம். ஆனால் புதிதாக பிறந்த குழந்தைகள் பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள சில வியப்பான விடயங்கள் உள்ளது.

கொழு கொழு “மே” குழந்தை

New Born Babyபிற மாதங்களில் பிறந்த குழந்தைகளை விட, மே மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடன் இருக்கும்.

தாயின் வாசனை

Mother's love

பிறந்த நொடியிலிருந்தே தன் தாயின் வாசனையைக் குழந்தைகள் அறிந்து வைத்திருக்கும்.அதுமட்டுமின்றி பிறந்த சில வாரங்களில், தம் தாயை அவை அடையாளமும் கண்டு கொள்ளும்.

 

கருவில் கேட்கும் திறமை

தாயின் கருவில் இருக்கும் குழந்தையால் வெளியே ஒலித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களைக் கேட்க முடியும்.நல்ல விடயங்களை சத்தமாகப் படித்துக் காண்பிப்பது, மெல்லிசை கேட்பது இவையெல்லாமே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் விடயங்களாகும்.

http://www.lauratusekphotography.com/

சுவை தெரியாது

பிறந்த குழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகும் வரை உப்பின் சுவை தெரியாது.இதற்கு சோடியத்தை உருவாக்கும் சிறுநீரகங்கள் முழு வளர்ச்சியடையாமல் இருப்பது தான் காரணம்.

New Born Baby

அகச் செவி நல்லா கேட்கும்

New Born Baby

பிறந்த குழந்தையிடம் உள்ள உறுப்புக்களில், அகச் செவி என்று அழைக்கப்படும் உள்புறக் காது மட்டுமே முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கும்.

இளம் நீச்சல் வீரர்கள்

New Born Baby

பிறந்த குழந்தைகள் இயற்கையிலேயே நீச்சல் வித்தைகளைப் பெற்றிருக்குமாம்! தண்ணீருக்கு அடியில் குழந்தைகளால் மூச்சை அடக்க முடியும்.சுமார் பத்து மாதங்கள் கருவில் மிதந்து கொண்டிருந்த அனுபவம் தான் அது!

Advertisements
பிரிவுகள்:ALL POSTS குறிச்சொற்கள்:
 1. chollukireen
  4:21 பிப இல் 2015/01/29

  குழந்தைகளைப் படத்தில் பார்க்கும் போது அள்ளி அணைத்து பாசத்தைக் கொட்டவேண்டும் போல உள்ளது. குழந்தைகளெல்லாம் கருவிலேயே எல்லாம் திரு உருவாகி விடுகிறதென்பது எல்லாம் இதுதான் போலும்.
  நீச்சல் தெரியுமாம் பாப்பாவுக்கு. முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி..
  உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு ஒவ்வொரு பாப்பாவின் முகத்திலும். ரஸிக்க,
  பார்க்க அருமையான புகைப்படங்கள் அன்புடன்

  Liked by 1 person

  • 4:59 பிப இல் 2015/01/29

   நன்றி அம்மா.உங்கள் கருத்துக்கள் செயற்கையற்ற உணர்வின் வெளிப்படுத்தல்கள் என்று தான் கூற வேண்டும்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி சொல்லுகிறேன்.

   Like

 2. 2:53 முப இல் 2015/02/01

  நான்கு மாதப் பேரனுடன் கொஞ்சுகிறேன்
  இந்திரவில் (வானவில் ) சொர்க்கம்.
  சோழன்……மழலை
  குழலைவிட இனிது…
  அருமை…
  வேதா. இலங்காதிலகம்.

  Liked by 1 person

  • 10:51 முப இல் 2015/02/01

   உங்கள் தமிழ் மொழி மீதான பற்றுக்கு வணக்கம்.மழலைச் செல்வம் போன்ற ஒரு செல்வம் இந்த உலகில் இல்லை.இறைவனின் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்க வேண்டுகிறேன்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: