இல்லம் > prabuwin > பட்டுப் புடவையை பாதுகாக்க அசத்தலான பல வழிகள்

பட்டுப் புடவையை பாதுகாக்க அசத்தலான பல வழிகள்


SILKS
பொதுவாக பட்டுப் புடவையை விரும்பாத பெண்களே கிடையாது என்று சொல்லலாம்.

அதிலும் தற்போது நம் நாட்டு  பெண்கள் பட்டுப் புடவை அணிவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்ற பண்டிகைகள் வந்துவிட்டால் புடவை கடைகளில் இந்த பட்டுப் புடவையை தெரிவு செய்ய ஒரு பிரம்மாண்ட கூட்டமே இருக்கும்.

ஆனால் இதை பிற துணிகளை போல் துவைத்து மடிப்பது மட்டும் போதாது. இதை பாதுகாக்க சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

சரியான பராமரிப்பு இல்லையேல் சில தினங்களிலேயே பட்டுப் புடவை பழைய புடவையாகிவிடும்.

பட்டுப் புடவையை பராமரிக்க சிறந்த(சூப்பர்) ஆலோசனைகள் (டிப்ஸ்)

பட்டுத் துணிகளை சவர்க்காரத்தை போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும்( கழுவும்) போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.

துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல் நிழலில் காற்றில் படும்படி போடுவது நல்லது.

பட்டுப் புடவையை வெளுக்கும்(இஸ்திரி) போது அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.

புதிதாக வாங்கும் பட்டுப் புடவைகளை, ஒரு ஆண்டுக்குள் துவைக்க வேண்டியது அவசியம்.

முதலில் துவைக்கும் போது சவர்க்காரம் போடாமல், நல்ல தண்ணீரில் உடல் பகுதியைத் தனியாகவும், பார்டர்(விளிம்பு) பகுதியைத் தனியாகவும் அலச வேண்டும்.

பட்டுப் புடவைகளை சலவை இயந்திரத்தில் போட்டுத் துவைப்பதை விட, கையால் துவைப்பதே நல்லது.

பட்டுப் புடவைகளை காற்று புகாத பாலிதின் கவர்களில் வைப்பது நல்லதல்ல. துணிப் பையில் போட்டு வைப்பது தான் நல்லது.

பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளை, பட்டுப் புடவைகளின் மேல் போட்டு வைக்கக் கூடாது. ஏனெனில் பட்டுப் புடவைகள் கெட்டுப் போக, அது ஒரு காரணமாக அமைகிறது.

ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்திய பின் காற்று படும் இடத்தில் புடவையை வைத்து, பின் இஸ்திரி செய்தால் போதும்.

ஒரு படி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கிளிசரினை கலந்து பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால் சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.

பட்டுப் புடவையில் எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து, அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.

SILKS 2

Advertisements
பிரிவுகள்:prabuwin குறிச்சொற்கள்:
 1. 11:14 முப இல் 2015/02/02

  ஓஹோ! எண்ணெய் கறை இருந்தால் சந்தனம் போட்டால் சரியாகி விடுமா! சூப்பர் தகவல்! நன்றி சார்!

  Liked by 1 person

  • 2:37 பிப இல் 2015/02/02

   என்னுடைய அம்மா சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி மஹா மேடம்.

   Liked by 1 person

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: