உலகையே அழ வைத்த இரண்டு வயது குழந்தையின் கண்ணீர்
“youtube” சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள காணொளி ஒன்று பார்ப்பவர்கள் எல்லோரையும் அழ வைத்துள்ளது. பெற்றோரின் திருமண பாடலை கேட்கும் போதெல்லாம் இரண்டு வயது இந்த குழந்தை அழத் தொடங்கி விடுகின்றதாம்.இந்த காணொளி குறித்து பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.இந்தக் குழந்தையின் தாய் ஒரு வருடத்திற்கு முன் இறந்து விட்டதாகவும்,அந்த குழந்தையின் தாய் பாடிய குரலை கேட்கும் போதெல்லாம் இந்த குழந்தை இவ்வாறு அழுவதாகவும் பல இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து பலரும் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருவதனால் உண்மை எதுவென்பதில் குழப்பம் நீடித்து வருகின்றது.உலகம் முழுவதும், இந்தக் குழந்தைக்காக அனுதாபக் குரல்கள் தொடர்ச்சியாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த காணொளியை இதுவரை 52 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
பிரபுவின் வேண்டுகோள்!
காரணம் எதுவாக இருப்பினும் ஒரு பிஞ்சு குழந்தையை அழ வைக்காதீர்கள்.தயவு செய்து உங்கள் மகிழ்ச்சிக்காக குழந்தைகளின் மன வளர்ச்சியை இளவயதில் கொன்று விடாதீர்கள்.எவ்வாறான உலகில் நாங்கள் வாழ்கிறோம் என்பதில் வெட்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தொடர்புடைய செய்திகள்.
நானும் இந்தக் காணொளியைப் பார்த்தேன். துக்கம் தாங்காது அந்தக்குழந்தை
அழுவது பார்க்கச் சகிக்வில்லை.. நாட்களாக மறந்துவிடும் என்ற தத்துவம் எங்கே போனது.? அதிசய பாசத்தையும்,மறதி ஏற்படாத சக்தியும் கொண்ட ஒரு தனிப்பட்ட பிறவியாகத்தான் உள்ளது.அதை மறறக்கடிக்க முயல வேண்டுமே தவிர இப்படி செய்தியைப் பரப்பலாகாது. குழந்தை ஐயோ பாவம்.
நல்லநிலையை அடைய வேண்டும்.. அன்புடன்
!
LikeLike
சரியாகச் சொன்னீர்கள் அம்மா.மனிதாபிமானம் எங்கே போனது என்றே தெரியவில்லை.நன்றி அம்மா.அன்புடன்..
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி சொல்லுகிறேன்.
LikeLike